பட்ஜெட்டை வாசித்த பிடிஆர்.. கத்தி கூச்சல் போட்ட அதிமுக எம்எல்ஏக்கள்.. கண்டித்த சபாநாயகர்.. வெளிநடப்பு
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்த போது எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
சென்னை: சட்டசபையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டை வாசித்த போது அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் அப்பாவு அமைதியாக இருக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்களை கேட்டுக்கொண்டார். பட்ஜெட் உரையைத் தவிர வேறு எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று கூறிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை சட்டசபையில் இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். சட்டப்பேரவையில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அறையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
சட்டசபையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் இருக்கை மாற்றப்படாத நிலையில், இதை காரணமாக வைத்து பட்ஜெட் உரையை அதிமுகவினர் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்த போது அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் அப்பாவு அனைவரும் அமைதியாக இருக்கையில் அமர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சட்டசபையில் இன்றைய தினம் நிதிநிலை அறிக்கையை தவிர வேறு எதுவும் அவைக்குறிப்பில் இடம் பெறாது என்றும் சபாநாயகர் தெரிவித்தார். இதனையடுத்து பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications