Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பில்கிஸ் பானு வழக்கு.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது.. எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பயங்கர கலவரம் வெடித்தது. இதில் சுமார் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். கோத்ரா ரயில் சம்பவத்தின் போது ரந்திக்பூர் கிராமத்தை சேர்ந்த 21 வயதான பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது.

AIADMK welcomes Supreme Court verdict in Bilkis Banu case - Edappadi Palaniswami

அத்துடன் அவரது 3 வயது பெண் குழந்தை உள்பட குடும்பத்தினர் 7 பேரையும் கொடூரமாக கொலை செய்தது. இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை மகராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. ஆனால் தண்டனைக்காலம் முடிவடைவதற்குள் இவர்களை கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று குஜராத் மாநில அரசு விடுதலை செய்தது.

விடுதலையானவர்களுக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து சிலர் வரவேற்பளித்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொடூர குற்றத்தை அரங்கேற்றிய 11 பேரையும் விடுதலை செய்ததை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரமுகர் சுபாஷினி அலி, திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் மகுவா மொய்த்ரா உள்பட ஏராளமானோர் பொதுநல மனுக்களையும் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மகராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. மகாராஷ்டிரா அரசுதான் 11 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க முடியும். எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்கிறோம்" என்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்றனர். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த இனக்கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற இசுலாமிய சகோதரி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது குழந்தை உள்பட குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை முன்கூட்டியே குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து, பாதிக்கப்பட்ட சகோதரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த விடுதலையை ரத்து செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+