இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை! என்டிஏ-வுடனும் கிடையாது! சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக இனி எந்த கூட்டணியிலும் இல்லை, தேர்தலுக்கு முந்தைய கூட்டணியிலும் இல்லை என சி.வி.சண்முகம் அணி எம்எல்ஏக்களின் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுகவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சி.வி.சண்முகம் வீட்டில் ஆலோசனை செய்து சில தீர்மானங்களை நிறைவேற்றினர். இந்த கூட்டத்திற்கு பிறகு சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.

admk tvk

அப்போது அவர் கூறுகையில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததை ஒப்புக் கொள்கிறோம். விஜய் முதல்வராக வர வேண்டும் என மக்கள் கொடுத்த தீர்ப்பையும் நாங்கள் தலைவணங்கி ஏற்கிறோம்.

இன்று அதிமுக எம்எல்ஏக்கள் குழு கூட்டத்தை கூட்டினோம். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னவென்றால், என்டிஏ கூட்டணியில் அதிமுக இல்லை. தேர்தலுக்கு முந்தைய கூட்டணியிலும் இல்லை.

அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக் குழுவின் தலைவராக எஸ்.பி.வேலுமணியையும், அதிமுக கொறடாவாக சி.விஜயபாஸ்கரையும், துணைத் தலைவராக ஹரியையும் தேர்வு செய்துள்ளோம்.

அதிமுக காப்பாற்றப்பட வேண்டும். அதிமுகவின் பொதுக் குழுவை எடப்பாடி பழனிசாமி கூட்ட வேண்டும். அதிமுகவின் தொடர் தோல்விகளால் கேள்விகளை எழுப்புகிறோம். அதிமுகவின் தோல்விக்கு தனிப்பட்ட யாரையும் நாங்கள் குறை சொல்லவில்லை. நாங்கள் அனைவரும் பொறுப்பேற்கிறோம். நாங்கள் எங்கள் கூட்டத்தில் போட்ட தீர்மானத்தின்படி முதல்வர் விஜய்க்கு நாங்கள் எல்லோரும் ஆதரவு அளிப்பது என முடிவு செய்துள்ளோம்.

உடனே அதிமுக பிளவுப்பட்டுவிட்டது என யாரும் சொல்லாதீர்கள். நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். அதிமுக உடைய நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம். எடப்பாடி பழனிசாமி இறங்கி வர வேண்டும். இவ்வாறு சி.வி.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் புதிதாகக் களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்ததுடன், அதன் தலைவர் விஜய் முதல் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இத்தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் களமிறங்கிய அ.தி.மு.க. வெறும் 47 இடங்களைக் மட்டுமே வென்று, மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இதன் காரணமாக, அக்கட்சியினர் சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தனர்.

இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என அக்கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், எஸ்.பி. வேலுமணியை சட்டமன்றக் கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மூன்று நாட்களாக சென்னையில் இரு தரப்பினரும் தனித்தனியே ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஒருபுறம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவரது சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். மறுபுறம், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் சென்னை எம்.ஆர்.சி. நகர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி உட்பட பல சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்றும், அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தானே தொடர்வேன் என்றும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அவருக்குச் சில மாவட்டச் செயலாளர்களும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். ஆனால், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர்.

எங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. எனவே, எஸ்.பி. வேலுமணிதான் அ.தி.மு.க. சட்டமன்றக் குழுவின் தலைவராக இருக்க வேண்டும் என்று சி.வி. சண்முகம் தரப்பினர் அழுத்தமாக வலியுறுத்துகின்றனர். மேலும், எடப்பாடி பழனிசாமியைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதிலும் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழக அரசு கோரவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின்போது முழு அளவில் ஆதரவு அளித்து, ஆளும் அமைச்சரவையிலும் இடம் பெற வேண்டும் என்று சி.வி. சண்முகம் தரப்பினர் விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தங்களுக்குள்ளதாக சி.வி. சண்முகம் தரப்பு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 24 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இவர்கள் இன்று மாலை முதல்வர் விஜயை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவுள்ளனர். தவெக அமைச்சரவையில் இடம் பெறவும் சி.வி. சண்முகம் தலைமையிலான இந்த அணி திட்டமிட்டுள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+