பாமக ரூட்டில் அதிமுக.. தமிழக அரசுக்கு நெருக்கடி தரும் எடப்பாடி.. ஜுலை 23ல் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழகத்தில் நேற்று 4.83 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், ஆளும் திமுகவை கண்டித்தும் வரும் 23ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது.
தமிழகத்தில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு என்பது நேற்று மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 4.83 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த உயர்த்தப்பட்ட மின்கட்டணம் என்பது ஜுலை 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த முறை நாம் மின்கட்டணம் செலுத்தும்போது புதிய மின்கட்டணத்தின் அடிப்படையில் பணம் வழங்க வேண்டியிருக்கும்.
இந்நிலையில் தான் மின்கட்டண உயர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக உள்பட பல எதிர்க்கட்சிகள் மின்கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதோடு லோக்சபா மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றியை பரிசளித்த தமிழக மக்களுக்கு திமுக அரசின் பரிசு இதுதான் என எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் தான் மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் திமுக அரசு பதவயேற்ற கடந்த 3 ஆண்டுகளில் மூன்றாவது மறையா மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கிறது.
அதேபோல் நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்தும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும், வரும் 23.7.2023 - செவ்வாய்க்கிழமை காலை 10 .30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தெரிவித்து கொள்கிறோம்'' என கூறப்பட்டுள்ளது.
இந்த செய்திக்குறிப்பானது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலோடு தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்க்கது. முன்னதாக தமிழக அரசு மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று பாமக சார்பில் ஜுலை 19 ம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் அதிமுகவும் போராட்டம் அறிவித்துள்ளது.
-
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications