அனைத்து இடைத்தேர்தலிலும் அதிமுகதான் வெற்றிபெறும்.. அடித்துக் கூறும் அமைச்சர் ஜெயக்குமார்
பெரம்பூர் தொகுதி உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக வெல்லும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை: பெரம்பூர் தொகுதி உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக வெல்லும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் பெரம்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜேஷ் வரவேற்புரையாற்றினார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் உடுமலைபேட்டை ராதாகிருஷ்ணன், ஜேசிடி பிரபாகரன், கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: பெரம்பூர் தொகுதி மட்டுமல்ல நடைபெற உள்ள அனைத்து இடைத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும். பெரம்பூர் தொகுதியில் ஸ்டாலின் 9 கட்சிகளோடு கூட்டணி வைத்தாலும் சரி, தினகரனோடு கள்ள உறவு வைத்தாலும் சரி, நாம் ஒன்றுப்பட்டு உழைத்தால் மிகப்பெரிய வெற்றியை வெற்றி பெற முடியும்.
அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு, ஆட்சியை பிடித்து விடலாம் என்று சிலர் கணக்கு போட்டார்கள், ஆனால் அந்த கணக்கையெல்லாம் முறியடித்து ஆட்சி வெற்றி நடைபோட்டு கொண்டு இருக்கிறது.
திமுக , அமமுக கொள்ளை அடித்த பணத்தை காப்பாற்றுவதற்காக கட்சியை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக மட்டும் தான் கொள்கைகளை கடைபிடித்து கட்சியை நடத்தி கொண்டு இருக்கிறது. பெரம்பூர் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என்று கூறினார்.
நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன் கூறியதாவது, நடைபெற இருக்கின்ற இடைத் தேர்தலுக்காக தேர்தல் பணிகளை நாங்கள் இப்போது இருந்தே துவக்கி இருக்கிறோம்.
30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெறும்.
பத்திரிக்கையாளரை தாக்கியது திமுக நிர்வாகி அல்ல என்று ஸ்டாலின் கூறியது குறித்து கேட்டதற்கு, திமுக இப்பொழுது அல்ல, கருணாநிதி காலத்தில் இருந்தே பொய் மட்டுமே கூறி வருகிறது என்று கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications