எடப்பாடி பொதுச் செயலாளரான பின் முதல் கூட்டம்! ஏப்ரல் 7இல் நடைபெறும் அதிமுக செயற்குழு! ஏன் முக்கியம்
சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவில் பல மாதங்களாகவே ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இடையே மோதல் இருந்து வந்தது அனைவருக்கும் தெரியும். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் வரை எல்லாம் போய் பார்த்தார் ஓபிஎஸ்.
இருப்பினும், இதில் பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றே தீர்ப்பளித்தது..

அதிமுக
அதைத் தொடர்ந்து அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் வழக்கு தொடரப்பட்டது. இது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. ஏனென்றால், இந்த பொதுக்குழுவில் தான் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வானார். மேலும், ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை நீக்கும் தீர்மானமும் இதில் தான் நிறைவேற்றப்பட்டது. இதிலும் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவாகத் தீர்ப்பு வந்தது.

அதிமுக பொதுச்செயலாளர்
இதற்கு முன்னரே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான நடைமுறைகள் நடந்து முடிந்திருந்தது. தேர்தல் முடிவுகளை அறிவிக்க மட்டுமே நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த தீர்ப்பு வந்தவுடன் சில நிமிடங்களிலேயே எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராகப் பதவியேற்றார். இந்தச் சூழலில், அதிமுக செயற்குழு கூட்டம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகப் பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அதிமுக செயற்குழு கூட்டம் வருகின்ற 7.4.2023 வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.

செயற்குழு கூட்டம்
இக்கூட்டத்தில், கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 7.4.2023 அன்று நடைபெறும் எனத் தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஏன் முக்கியம்
விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இரண்டு செயற்குழு கூட்டம் மற்றும் ஒரு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும். அந்த அடிப்படையில் இந்தாண்டின் முதற் செயற்குழுவாக இது இருக்கும். அதிமுக உட்கட்சி விதிகள்படி, எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகத் தேர்வாகியுள்ள நிலையில், அதற்கான ஒப்புதலை இந்த செயற்குழு தான் வழங்க வேண்டும். அதன் பின்னர், பொதுக்குழுவும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரானதற்கு ஒப்புதலை வழங்கும். இதன் காரணமாகவே இந்த செயற்குழு கூட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications