தியாகம் பண்ணுங்க.. எடப்பாடியிடம் பிரஷர் தந்த 6 சீனியர்ஸ்.. வீட்டில் என்ன நடந்தது? போட்டுடைத்த புள்ளி
சென்னை: எடப்பாடிக்கு இத்தனை காலம் நெருக்கமாக இருந்தவர்களே எடப்பாடியிடம் போய் அவரிடம் பேசி உள்ளனர். எவ்வளவு நாள் எடப்பாடி நான்தான் எல்லாம் என்று பேசிக்கொண்டு இருக்க முடியும், எடப்பாடி பழனிசாமி சில விஷயங்களை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். நான் மட்டும்தான் அதிமுக என்று இருக்க கூடாது., என்று சீனியர் லீடர் அவரிடம் பிரஷர் கொடுத்து உள்ளனர், என்று மூத்த பத்திரிக்கையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் கடுமையான உட்கட்சி மோதல் ஏற்பட்டு உள்ளது. எதிர்பார்க்காத மோதல் கட்சிக்கு உள்ளே எழுந்துள்ளது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. அதிமுகவின் செல்வாக்கு சரியும் நிலையில் அதிமுக மாஜி அமைச்சர்கள் 6 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

பேட்டி: இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பிரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி சில விஷயங்களை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். நான் மட்டும்தான் அதிமுக என்று இருக்க கூடாது. சில விஷயங்களை விட்டுக்கொடுத்து செல்ல தயாராக இருக்க வேண்டும் அவர். சில சமயங்களில் இரட்டை தலைமை என்பது சரியாக இருக்காது அதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதற்காக உங்களுடைய தலைமை சரியாக இல்லையே. உங்கள் தலைமையின் கீழ் அதிமுக வெற்றிபெறவே இல்லை.
எடப்பாடியை மூத்த தலைவர்கள் சேர்ந்து நீக்கும் நிலை ஏற்படலாம். பாஜகவை விடுங்கள். அதை பற்றி யோசிக்க வேண்டாம். அதிமுகவின் உட்கட்சி வாக்குகள் நிலைக்க வேண்டும். கட்சியில் பிரச்சனைகள் இருக்க கூடாது என்றால் எடப்பாடி மற்றவர்களை ஏற்க வேண்டும். சசிகலா - ஓபிஎஸ் போன்றவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஓபிஎஸ் வந்தால் பாஜக அதிமுகவை அபகரிக்கும் என்கிறார்கள். எடப்பாடியே பாஜக ஆள்தான்.
அவர் எங்கேயாவது பாஜகவை விமர்சனம் செய்துள்ளாரா? பாஜகவை தாக்கி பேசி உள்ளாரா? சொல்லுங்கள்? ஓ பன்னீர்செல்வம் வந்தால் கட்சிக்குள் பாஜக வந்துவிடும் என்று சொல்ல முடியுமா? எடப்பாடியே பாஜக ஆள்தான். உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோரால் எடப்பாடிக்கு ஏன் வெற்றி கொடுக்க முடியவில்லை. அவரால் ஏன் அதிமுகவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.
மோதல்: நான்தான் எல்லாம்.. நான் அடுத்த ஜெயலலிதா என்றெல்லாம் பேச தொடங்கிவிட்டார். தன்னை ஜெயலலிதா உடன் எடப்பாடி ஒப்பிட தொடங்கிவிட்டார்.மணியான மாஜி அமைச்சர்கள் உட்பட 6 மாஜிக்கள் எடப்பாடியை சந்தித்து பேசி உள்ளனர். லோக்கல் தொண்டர்கள் பிரஷர் காரணமாக போய் பேசி உள்ளனர். அவரிடம் நெருக்கமாக இருந்தவர்களே எடப்பாடியிடம் போய் பேசி உள்ளனர். எவ்வளவு நாள் எடப்பாடி நான்தான் எல்லாம் என்று பேசிக்கொண்டு இருக்க முடியும்.
இதை ஓ பன்னீர்செல்வம் தூண்டிவிடவில்லை. அதை தேர்தல் ரிசல்ட்தான் தூண்டி விட்டு உள்ளது. எடப்பாடி ஆதரவாளர்களுக்கு உள்ளேயே தற்போது ஒற்றுமைக்கான உணர்வு இல்லை. இரண்டாம் கட்ட தலைவர்கள் சுயமாக உணர்ந்து கொண்டனர். இதை ஓ பன்னீர்செல்வம் தூண்டிவிடவில்லை. அதை தேர்தல் ரிசல்ட்தான் தூண்டி விட்டு உள்ளது. எடப்பாடி ஆதரவாளர்களுக்கு உள்ளேயே தற்போது ஒற்றுமைக்கான உணர்வு இல்லை. இரண்டாம் கட்ட தலைவர்கள் சுயமாக உணர்ந்து கொண்டனர்.
எடப்பாடி பழனிசாமி சில விஷயங்களை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். நான் மட்டும்தான் அதிமுக என்று இருக்க கூடாது., என்று சீனியர் லீடர் அவரிடம் பிரஷர் கொடுத்து உள்ளனர். ஒரு மீட்டிங் மட்டும் போட்டால் போதும் அது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போய்விடும். அதனால்தான் எடப்பாடி மீட்டிங் போடாமல் அமைதியாக இருக்கிறார், என்று மூத்த பத்திரிக்கையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications