அதிமுக vs பாஜக.. அண்ணாமலையை மாற்றுங்கள்.. கோரிக்கை வைத்த அதிமுக.. வாய்ப்பில்லை ராஜா.. நிராகரித்த பாஜக
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று டெல்லி சென்ற அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததாகவும் அந்த கோரிக்கையை பாஜக தலைமை நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைமையின் நடவடிக்கையால் போன வேகத்தில் திரும்பியுள்ளனர் அதிமுக நிர்வாகிகள்.
எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்று அதிமுக தலைவர்களும், அண்ணாமலையும் கூறினாலும் பிரச்சினை நீரு பூத்த நெருப்பாகவே இருக்கிறது. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில் எந்த பிளவும் இல்லை என்றும் அதிமுக நிர்வாகிகளுக்கும் அண்ணாமலைக்கும் இடையில்தான் பிரச்சினை என்று தெளிவாகவே தெரியவந்துள்ளது.

நான் தலைவரானதே பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வேண்டும் என்றுதான். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன் என்று பகிரங்கமாகவே கூறி வருகிறார் அண்ணாமலை. அண்ணாமலையைப் பொருத்தவரையில் பலமுறை வெளிப்படையாக "அதிமுக வெற்றி பெறுவதை விட பாஜகவை வளர்ப்பதே எனது கடமை" என்பதைக் கூறியுள்ளார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த போது லோக்சபா தேர்தலை தனித்தே சந்தித்து பிரம்மாண்ட வெற்றி பெற்றார். சட்டசபை தேர்தலில் சிறிய கட்சிகளை இணைத்து அனைவரையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்து ஆட்சி அமைத்தார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எல்லாமே தலைகீழாகி விட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு பாஜக உடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது அதிமுக. தேனி தவிர எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பிறகு அவரது பேச்சு எல்லாமே அதிமுகவிற்கும் நிர்வாகிகளுக்கும், தலைவர்களுக்கும் எதிராகவே உள்ளது.
அண்ணாமலை இருக்கும் வரை கூட்டணி கிடையாது" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அப்போது அண்ணாமலையும் கூட்டணி இல்லை என்றார். கூட்டணி அமைத்தால் நான் ராஜினாமா செய்யவும் தயார் என்றார்.
"ஜெயலலிதா தமிழகத்தில் மோசமான முதல்வர். 1991-96 ஆண்டுகள் தான் லஞ்ச ஊழல் ஆட்சி நடந்தது" என்று விமர்சனம் செய்தார். இந்த கருத்து அதிமுகவினரைக் கொதிப்படையச் செய்தது. அண்ணாமலைக்கு எதிராக கொந்தளித்தனர். இறுதியில் டெல்லி தலைமை அதிமுக தலைவர்களை அழைத்து சமாதானம் செய்ய, கூட்டணி தொடர்கிறது என அறிவித்துவிட்டனர்.
டெல்லி பாஜகவை எப்போதும் எடப்பாடி பழனிச்சாமி விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்பதனால் ஒரே கட்சிக்குள் நடக்கும் கோஷ்டிபூசல்கள் போலவே தமிழகத்தில் அதிமுக பாஜக இடையே நடக்கும் சண்டைகளை பார்க்க முடிகிறது. அதனால்தான் இது அரசியல் டிராமா என்று புகழேந்தி, திமுக தலைவர்கள் கூறி வருகின்றனர். இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன என்றும் கூறுகின்றனர்.
கடந்த 15ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பாஜக தலைவர் அமித் ஷவை சந்தித்தார். அப்போதே தேர்தல் கூட்டணி பற்றி இருவரும் பேசியதாக தகவல்கள் வெளியானது. தகவல்களின் படி, பாஜக 2019 தேர்தலிலேயே கூறியதைப் போல எடப்பாடி தலைமையிலான அதிமுகவுடன் ஒபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரையும் இணைக்க விரும்பியதாக தெரிகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ எந்தக் காலத்திலும் இவர்களுடன் ஒன்றிணைவது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.
பாஜக கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சி என்று பார்த்தால் அதிமுக மட்டுமே. ஆனால் அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்ய நினைத்த அமித் ஷா, தமிழகத்தில் உள்ள 40ல் 20 நாடாளுமன்ற இடங்களைக் கேட்டுள்ளார். ஒபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடனும் இணைந்து செயல்பட விரும்புகிறது பாஜக. எனவேதான் தங்களின் பங்காக அமித்ஷா 20 சீட்டுகள் கேட்டதாக தெரிகிறது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கட்சியின் மூத்த உறுப்பினர்களை கேட்டு சொல்வதாக தெரிவித்துவிட்டு தமிழகம் திரும்பியிருக்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில்தான் அண்ணா பற்றி பேசிய அண்ணாமலையை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்து விட்டனர் அதிமுக நிர்வாகிகள்.

அதிமுக பாஜக இடையே கூட்டணி முறிந்து விட்டது என்று கூறிய ஜெயக்குமார் கடுமையான கருத்துக்களை முன் வைத்தார். தேர்தல் நேரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கூட்டணி அமைக்கப்படும் என்றும் கூறினார் ஜெயக்குமார். அதே நேரத்தில் இரு தினங்களுக்கு முன்பு பேசிய செல்லூர் ராஜூவோ, பாஜக உடன் எங்களுக்கு பிரச்சினை இல்லை என்றும் மோடிதான் பிரதமர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த முதல்வர் என்றும் பேட்டி அளித்தார்.
அதே நாளில் பேட்டி அளித்த அண்ணாமலையோ, பாஜக உடன் அதிமுகவிற்கு பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை என்று கூறினார். அண்ணாமலைக்கும் பாஜக தலைவர்களுக்கும் பிரச்சினை இருக்கலாம் ஆனால் அது எனக்கு தெரியாது என்றும் சொல்லி சமாளித்தார். அரசியலுக்காக தன்மானத்தை விட்டுத்தர மாட்டேன் என்று சொன்னார் அண்ணாமலை. கூட்டணி கட்சிகளிடையே முட்டல் மோதல் இருப்பது சகஜம்தான் என்றும் சொன்னார். எடப்பாடி பழனிச்சாமியோ இதுவரை எந்த ஒரு வார்த்தையும் இந்த கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைப் பற்றி வெளிப்படையாக சொல்லவேயில்லை.
அதே நேரத்தில் கூட்டணி பற்றியோ, பாஜக தலைமை பற்றியோ வெளிப்படையாக பேசக்கூடாது என்று உத்தரவிட்டதாக தெரிகிறது. அதையும் கேட்காமல் செல்லூர் ராஜூ, ஆர்.பி உதயகுமார் பேசியது எடப்பாடி பழனிச்சாமியை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம்.
இந்த நிலையில்தான் அதிமுக மூத்த தலைவர்கள் வெள்ளிக்கிழமை மாலை டெல்லி சென்றனர். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி. முனுசாமி, அதிமுக எம்.பி. தம்பிதுரை உள்ளிட்டோர் பாஜக தலைவரிடம் பேசியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணி தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என பாஜக தேசிய தலைமையிடம் அதிமுக மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கையை பாஜக தலைமை நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டு எங்களை சந்திக்க வந்தது ஏன் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, அதிமுக தலைவர்களிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதே கோரிக்கையோடு அமித்ஷாவை சந்திக்க இருந்த நிலையில் அதிமுக நிர்வாகிகளை அமித்ஷா சந்திக்கவேயில்லை. தங்களது கோரிக்கை நிறைவேறாததால் அதிமுக தலைவர்கள் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாமலை கட்சிக்கு வந்த பிறகு இளைய தலைமுறையினர் பலரும் பாஜகவில் இணைந்திருக்கின்றனர். இப்போது அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் பாதயாத்திரை இளைய தலைமுறையினரிடம் பெறும் வரவேற்பினை பெற்றுள்ளது. எனவேதான் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தலைமையை மாற்றும் எண்ணம் எதுவும் பாஜக தலைமைக்கு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications