”ஒரே நாடு ஒரே தேர்தல்”: 2015, 2018, 2019, 2023-ல் ‘மல்ட்டி ஸ்டேண்ட்’- அதிமுகவின் ”பல்டி’ சரித்திரம்
சென்னை: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கனத்த விவாதங்களையும் கடும் எதிர்ப்புகளையும் உருவாக்கி வைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் "ஒரே நாடு ஒரே தேர்தல்" நடைமுறையை மிக மிக கடுமையாக ஏற்கனவே எதிர்த்துள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்திடமும் இது தொடர்பாக அறிக்கைகளைக் கொடுத்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திமுகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நிலைப்பாடு எடுத்திருக்கிறது. அதிமுகவின் நிலைப்பாடுகளின் தொகுப்பு:
2015: தமிழ்நாடு முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அண்ணா திமுக அறிக்கை கொடுத்தது.
2018: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக சட்ட ஆணையம் கருத்துகள் கேட்டது. அப்போதும் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அண்ணா திமுக இத்திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்தது. அத்துடன் டெல்லியில் நடைபெற்ற சட்ட ஆணையக் கூட்டத்தில் அதிமுகவின் தம்பிதுரை, சிவி சண்முகம் பங்கேற்று 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவதை எதிர்க்கிறோம். 2024-ம் ஆண்டு வேண்டுமானால் லோக்சபா, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம். அப்போது மத்திய அரசை ஆதரிப்போம் எனவும் அதிமுக தெரிவித்தது.
2019: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் இன்றைய "இந்தியா" கூட்டணியில் உள்ள திமுக உள்ளிட்ட பல கட்சிகள் பங்கேற்கவில்லை. அதிமுக சார்பில் அப்போதைய சட்ட அமைச்சர் சிவி சண்முகம் டெல்லி சென்ற நிலையிலும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
2021: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி ஆட்சி அமைத்தது. அப்போது முதலே 2024-ல் தமிழ்நாடு சட்டசபைக்கும் லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து தேர்தல் நடக்கும் என அதிமுகவின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார்.
2023: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டது. இதற்கு அண்ணா திமுக தரப்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், ஒரே நாடு- ஒரே தேர்தல் முறையை ஆதரிக்கிறோம் என தெரிவிக்கப்பட்டது. 2015-ல் ஜெயலலிதா ஆதரித்த திட்டம்தான்.. ஆகையால் ஆதரிக்கிறோம் எனவும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு தரப்புமே கோரஷாக ஆதரவு தெரிவித்தது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications