சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொள்ளாச்சியில் போட்டியிடுவது அதிமுகவா.. பாஜகவா... தொண்டர்களை குழப்பிய சின்னம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    பொள்ளாச்சியில் தொண்டர்களை குழப்பிய சின்னம்!- வீடியோ

    பொள்ளாச்சி: பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் அதிமுக போட்டியிட உள்ள நிலையில் அங்கு தாமரை சின்னம் வரையப்பட்டிருந்ததால் தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர்.

    பொதுவாகவே கொங்கு மண்டலம் மொத்தமுமே அதிமுகவின் கோட்டையாக உள்ளது. குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையின் அனைத்து தொகுதியிலும் வென்று அசத்தியது. ஆனால் கூட்டணிக் கட்சியான பாஜக கேட்டதால் கோவையை தூக்கி கொடுத்துவிட்டது. இதேபோல் பொள்ளாச்சி தொகுதியை வானதி சீனிவாசன் கேட்டு இருந்தார். ஆனால் அதிமுக தரமறுத்துவிட்டது. மேலும் கொங்கு மண்டலத்தில் மீதமுள்ள 9 மக்களவை தொகுதியிலும் அதிமுகதான் போட்டியிடுகிறது.

    AIDMK and BJP Volunteers are confused over Lotus symbol in AIADMK constituency

    இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் அதிமுக எம்பியாக உள்ள சி.மகேந்திரன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அதிமுகவினர் சின்னங்களை வரைந்து வாக்கு கேட்டு வருகின்றனர்.

    இந்தியாவின் சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.. அது மோடி தான்... சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு இந்தியாவின் சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.. அது மோடி தான்... சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு

    இந்நிலையில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக-வினரும் பல இடங்களில் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு சுவர் விளம்பரம் செய்து வைத்திருக்கிறார்கள். இதனால் அதிமுக தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் வானதி சீனிவாசனுக்காக தாமரை சின்னத்தை வரைந்து வைத்துள்ளனர் பாஜகவினர். ஆனால் அதிமுகவுக்கே பொள்ளாச்சி தொகுதி ஒதுக்கப்பட்டு விட்டது. இதனால் பாஜகவினர் தாமரை சின்னத்தை அழிக்க முடிவு செய்துள்ளனர்.

    English summary
    AIDMK and BJP Volunteers are confused over Lotus symbol in AIADMK constituency
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X