Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக கொடுத்த அந்த வாக்குறுதி.. திடீரென அறிவித்த அசாதுதீன் ஓவைசி.. எடப்பாடிக்கு குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக ஐதராபாத் லோக்சபா தொகுதி எம்பியும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவருமான அசாதுதின் ஓவைசி அறிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 19 ஆம் தேதி முதல் கட்ட தேர்தலிலேயே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் தமிழக அரசியல் களம் உச்ச கட்ட சூடுபிடித்துள்ளது.

AIMIM extends its support to AIADMK in the coming Lok Sabha elections says Asaduddin Owaisi


தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்த அதிமுக கூட்டணியில் சிறிய கட்சிகளே இடம் பெற்றுள்ளன. தேமுதிக மட்டுமே ஓரளவு பெரிய கட்சியாக உள்ளது.

மற்றொரு பக்கம், பாஜக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்துள்ள அதிமுக தற்போது, அக்கட்சியை கடுமையாக சாடத் தொடங்கியுள்ளது. பதிலுக்கு பாஜக தலைவர் அண்ணாமலையும் காட்டமாக விமர்சித்து வருகிறார். இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது. மறுபக்கம் அதிமுக - பாஜக இடையே கள்ளக் கூட்டணி நீடிப்பதாக திமுக விமர்சித்து வருகிறது. இவ்வாறாக அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அசாதுதின் ஓவைசி அறிவித்துள்ளார். ஐதராபாத் லோக்சபா தொகுதி எம்பியும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவருமான ஓவைசி இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக மறுத்துள்ளது. எதிர்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்து இருக்கிறது. சிஏஏ, என்ஆர்சி உள்ளிட்ட சட்டங்களை எதிர்ப்பதாகவும் அதிமுக உறுதி அளித்துள்ளது. எனவே ஏஐஎம்ஐஎம் கட்சி அதிமுகவிற்கு வரும் லோக்சபா தேர்தலில் ஆதரவு அளிக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்” என்று அறிவித்துள்ளார்.

பூச்சாண்டிக்கு அதிமுக பயப்படாது.. ஜூன் 4க்கு பிறகு பார்ப்போம்.. அண்ணாமலைக்கு சுடசுட எடப்பாடி பதிலடி


மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருபவர் ஓவைசி. பாஜகவின் கொள்கைகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் காட்டமாக ஓவைசி விமர்சித்து வருகிறார். அதேபோல், பாஜகவுக்கு எதிராக குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம் என பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தலில் வேட்பாளரையும் ஓவைசி நிறுத்தியிருக்கிறார்.

எனினும், சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பிரிக்க பாஜகவின் பி டீம் போல ஓவைசி செயல்படுவதாகவும் அவர் மீது விமர்சனங்கள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் ஓவைசி, அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து இருப்பது முக்கியத்தும் பெற்றுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஓவைசி கட்சி ஆதரவு அளித்த்து இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+