Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூச்சாண்டிக்கு அதிமுக பயப்படாது.. ஜூன் 4க்கு பிறகு பார்ப்போம்.. அண்ணாமலைக்கு சுடசுட எடப்பாடி பதிலடி

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: நாளுக்கு நாள் அதிமுகவிற்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. அதிமுக காணாமல் போகும் என்று சிலர் சொல்கிறார்கள். உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4ல் தெரியும். அதிமுகவை சீண்டி பார்க்க வேண்டாம். என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அரியலூரில் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- பகல் கனவு கண்டு கொண்டிருப்பவர் திமுக தலைவர் ஸ்டாலின். அதிமுகவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. நான் 35 கூட்டத்திற்கு மேல் சென்றிருக்கிறேன். கூட்டங்களில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது.

AIADMK not afraid of threats Edappadi Palaniswami responds to Annamalai criticism


கடல்போல் மக்கள் கூட்டம் காட்சியளிக்கிறது. ஒருசிலர் சொல்றாங்க.. 2024க்கு பிறகு அதிமுக எங்க போகும்னு தெரியாது என்கிறார்கள். அப்போ எங்கே போகும்?.. அதிமுக இங்கே தான் இருக்கும். காணாமல் போவோமாம்.. யார் காணாமல் போகிறார்கள் என்பது ஜூன் 4 ஆம் தேதி தெரியும். மக்கள் முடிவு செய்வார்கள்.

அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 50 ஆண்டு காலம் நிறைவு செய்த கட்சி. மதுரையில் பிரமாண்ட மாநில மாநாடு நடந்தது. இந்தியா மட்டுமில்லை இந்த மாநாடை உலகே திரும்பி பார்த்தது. இது எல்லாம் தெரியாம் சிலர் வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகிவிட்டதால், ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.. அதிமுகவை தோற்றுவித்தவர் எம்ஜிஆர். அதை கட்டி காத்தவர் ஜெயலலிதா.

இரண்டு பேரும் தெய்வமாக இருந்து அதிமுகவை காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே இரண்டு தெய்வத்தின் ஆசியுடன் இருக்கின்ற கட்சி என்பதை மறந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதிமுக தெய்வ சக்தி உள்ள கட்சி. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் காற்றில் கரைந்து போவார்கள். இந்த கட்சியை எத்தனை பேர் எதிர்த்து பார்த்தாங்க.. இப்போ அவர்கள் இருக்கிற இடம் தெரிகிறதா?... சில பழத்தை தூக்கிக்கொண்டு திரிகிறார்கள்.. யார் என்று தெரிகிறதா?...

அதிமுக உழைப்பை நம்பி இருக்கின்ற கட்சி. யாருக்கும் எதற்கும் அஞ்சாம் நெஞ்சம் கொண்ட நிர்வாகிகள், தொண்டர்கள் நிறைந்த கட்சி அதிமுக. இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி என்றால் அது தமிழ்நாடு என்ற பெருமையை பெற்றிருக்கிறோம். 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்த கட்சியை பார்த்து மிரட்டி பார்க்கிறீர்கள்..

இந்த வேலை எல்லாம் இங்கே எடுபடாது. அதிமுகவிடம் எடுபடாது. 2 கோடியே 6 லட்சம் தொண்டர்கள் இருக்கின்ற கட்சி. உங்களை போல தலைவன்... தலைவன் என்று சொல்கிற கட்சி இல்லை. தொண்டர்களால் ஆன கட்சி.. தொண்டர்கள் ஆளும் கட்சி.. எனவே அதிமுகவை சீண்டி பார்க்காதீங்க.. அதை சீண்டி பார்த்தால் அதன் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை தொண்டர்கள் உங்களுக்கு பாடம் கற்ப்பிப்பார்கள்.

மகளிர் உரிமைத்தொகையை கொடுக்க நாங்கள் பலமுறை போராடினோம். சட்டமன்றத்தில் அடிக்கடி வலியுறுத்தியதால் தான் 27 மாதங்களுக்கு பிறகு மகளிர் உரிமைத்தொகையை கொடுத்தனர். அதிமுக வலியுறுத்தியதால் தான் இப்போது பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைத்தது. தேர்தல் வாக்குறுதியில் என்ன சொன்னாங்க..

அனைத்து மகளிருக்கும் கொடுப்போம் என்று சொன்னாங்க.. இப்போது தகுதியுள்ள மகளிருக்கு மட்டும் தான் உரிமை தொகை ன்னு சொல்றாங்க.. சொல்றது ஒரு கோடியே 15 லட்சம் என்று ஆனால் கொடுப்பது வெறும் 70 லட்சம் பேருக்கு தான் கொடுக்கிறார்கள். இதேமாதிரி அனைத்து நகர்புறங்களிலும் அனைத்து பஸ்களுக்கும் பெண்களுக்கு இலவச பேருந்து என்று தேர்தல் அறிக்கையில் கூறினர்.

ஆனால் என்ன செய்தார்கள்.. பஸ்சுக்கு முன்னாடியும் பின்னாடியும் பிங்க் கலர் பெயிண்ட் அடித்து அந்த பஸ்சில் சென்றால் தான் என்று சொகிறார்கள். எப்படி ஏமாற்றுகிறார்கள். இப்படி மக்களை எல்லாம் ஏமாற்றிவிட்டு மக்கள் எங்க பக்கம் என்று சொல்கிறார். மக்கள் எல்லாரும் உங்க பக்கம் தான். ஆனால் ஓட்டு அதிமுகவுக்கு தான் போடுவாங்க. 3 வருஷம் ஆச்சு பதிவி ஏற்று.. ஆனால் மக்களை இப்போது தான் சந்திக்கிறார். அதுவும் டீக்கடையில்.. இவ்வாறு அவர் கூறினார்.

அது திராவிட முன்னேற்ற கழகம் கிடையாது! டிரக்ஸ் முன்னேற்ற கழகம்.. நிர்மலா சீதாராமன் காட்டமான விமர்சனம்


தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போகும் என அண்ணாமலை நேற்று பேசிய நிலையில் அதற்கு எடப்பாடி பழனிசாமி காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். இதனிடையே, இன்று தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை, லோக்சபா தேர்தலுகு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என்று பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுகவினரும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ அண்ணாமலையை விமர்சித்து கருத்து கூறினர். இந்த நிலையில் தான் அரியலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையின் பெயரை கூறாமல் பூச்சாண்டி என்றும், யார் காணாமல் போவார்கள் என்றும் விமர்சித்து பதிலடி கொடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+