ஏர் இந்தியா ஃப்ளைட்டின் கடைசி அசைவு.. மனித தவறா? எந்திர தவறா என கறுப்பு பெட்டி காட்டி தரும்: பிரபலம்
சென்னை: ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 241 பயணிகள் கருகி உயிரிழந்தனர். இவர்களது உடல்கள் அகமதாபாத் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அந்த உடல்களை எடுத்து செல்ல குடும்ப உறுப்பினர்கள் கண்ணீருடன் காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில், விபத்து குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "ஏர் இந்தியா நிறுவனம் டாடா கையில் உள்ளது.. Boeing 787 என்ற விமானத்தைதான் ஏர் இந்தியா நிறுவனம் வாங்கியிருந்தது.. 10 ஆண்டுகளாக இந்த விமானம் இயங்கி வந்துள்ளது.. 100 கோடி பேர் இதில் இதுவரை பயணம் செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள்..

இந்த போயிங் 787 விமானத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவரும், தற்போது பணியாற்றி கொண்டிருக்கும் ஒருவரும், இந்த விமானத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக, ஏற்கனவே பிரச்சனையை கிளப்பியிருக்கிறார்கள்.. குறிப்பாக, தரமற்ற பொருட்களை கொண்டு தயாரிப்பதாக, உண்மையை வெளிக்கொணரக்கூடிய நபர்கள் சொல்லியிருக்கிறார்கள்..
பறவை மோதலா
எனவே, விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் இதுகுறித்த விசாரணையை மேற்கொள்ளும். அதேபோல, அமெரிக்காவிலிருந்து உயர்மட்ட குழுவினர் உட்பட அனைவருமே இந்த விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள்.. ஏற்கனவே 2013-ல் 2 பேர் கிளப்பியிருந்த குறைபாடுகளை, ஏர் இந்தியா கவனத்தில் கொள்ளவில்லை?
என்ற கேள்வியும் அப்போது எழும்..
இந்த அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.. ஆனால், சதிவேலை காரணம் இல்லை என்ற தகவல் மட்டும் வெளியே வந்துள்ளது.. அதுவும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.. ஒருவேளை விமானத்தின் என்ஜின் பழுதாகியிருக்கலாம்,.. அல்லது பறவை மோதியிருக்கலாம் என்கிறார்கள்..
2 என்ஜின்கள்
இதில் என்ஜின் பழுதாவது அரிதாகவே நடக்கும்.. ஏனென்றால், ஒரு என்ஜின் பழுதானாலும், மற்றொன்று வேலை செய்யும்.. ஒரே நேரத்தில் இரண்டுமே பழுதாகாதாம்.. பறவை மோதல்கள், பல நேரங்களில் வெற்றிகரமாக பைலட்களால் சமாளிக்கப்படும்.. சிலநேரங்களில் விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது.
பறவைகள் வருவதற்கு முக்கிய காரணமே, விமான நிலையங்களை சுற்றிலும், உணவுப்பொருட்களை போடக்கூடாது என்பார்கள்.. அதேபோல, டேக்ஃஆப் ஆகும் இடத்தினில், அந்த தனியார் மருத்துவ கல்லூரி விடுதி கட்டிடத்தை எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. பரந்தூர் விமான நிலையத்துக்கு இடம் ஆக்கிரமிப்பிலும் பிரச்சனை நடப்பதே இதற்காகத்தான்.
கட்டிடம் எப்படி அங்கே?
எப்போதுமே ஒரு விமானம் உயரே பறந்து வானத்துக்கு போகும்வரை கட்டிடங்கள் பெரிதாக, அந்த பகுதியில் இருக்காது. எனவே அந்த தனியார் மருத்துவ கல்லூரி விடுதியின் கட்டமைப்பே கேள்விக்குறியாக உள்ளது.. அப்படியானால் விமான நிலைய வடிவமைப்பிலேயே கோளாறு உள்ளதா? டிராபிக் அதிகமுள்ள விமான நிலையத்தில் எப்படி இந்த சம்பவம் நடந்தது? என்பதும் ஆராயப்பட வேண்டியிருக்கிறது. இதுவும் இந்த வழக்கின் விசாரணையில் கவனிக்கப்பட வேண்டி உள்ளது.
2 முக்கிய கருவிகள்
இந்த விமான விபத்தின் விசாரணையானது 2 கருவிகளை வைத்து நடைபெறலாம்.. ஒன்று விமானத்திலுள்ள கருப்பு பெட்டியை வைத்து விசாரணை நடக்கும்..
விமானத்தின் கடைசி நேர அசைவுகளையும் பதிவு செய்யக்கூடிய எந்திர கருவிதான் கருப்பு பெட்டி.. எப்பேர்ப்பட்ட நெருப்பு பற்றினாலும், அந்த கருப்பு பெட்டி கருகாது.. இப்போதைக்கு அந்த கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.. ஆனால், அதுகுறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை..
பைலட் பேசிய வார்த்தை
அதேபோல, மற்றொரு கருவி, cockpit voice recorder என்பார்கள்.. இந்த கருவியில், பைலட் பேசிய கடைசி வார்த்தை பதிவாகியிருக்கும்.. ஆனால், இந்த விபத்தை பொறுத்தவரை, பைலட் பேசுவதற்குகூட நேரமில்லை என்கிறார்கள்..
மேடே தவிர அவர் வேறெதுவும் பேசவில்லை என தெரிகிறது. இந்த 2 கருவிகளில் கருப்பு பெட்டி முக்கியமானது.. என்ஜின் கோளாறா? வேறு ஏதாவது கருவிகள் பழுதா? என்பதெல்லாம் அதில் தெரிந்துவிடும்.
விமானம் மேலெழும்ப முடியாமல் போய்விட்டதால், அதற்கான காரணம், இந்த கருப்பு பெட்டியில் கண்டுபிடிக்கப்படும். நீதித்துறை விசாரணையும் இதில் நடக்கப்படுமா? தெரியவில்லை. ஆனால், கருப்பு பெட்டி கிடைத்துவிட்டதால், இந்த விபத்துக்கு காரணம் மனித தவறா? இயந்திர தவறா? என்பது தெரிந்துவிடும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications