இனி எல்லோருக்கும் ஹலால் உணவு வழங்கப்படாது.. ஏர்இந்தியா எடுத்த முக்கிய முடிவு.. மெனுவில் மாற்றம்
சென்னை: ஏர்இந்தியா சார்பாக வழங்கப்படும் உணவுகளில் ஹலால் உணவுகள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்படாது என்று ஏர்இந்தியா தெரிவித்து உள்ளது. ஹலால் உணவுகளை தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே அந்த உணவு வழங்கப்படும்.. மற்ற எல்லோருக்கும் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
FSSAI சான்றிதழ் தவிர்த்து ஹலால் போன்ற வேறு எந்த சான்றிதழுடனும் வரும் உணவு பொருட்களுக்கு தடை விதிக்க சட்டம் இயற்றக்கோரி நாடு முழுக்க பாஜகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல மாநிலங்களில் பாஜகவின் தேர்தல் அறிக்கையாகவும் இது உள்ளது. ஹலால் உணவு என்பது இஸ்லாமிய சட்டத்தை கடைபிடித்து உருவாக்கப்பட்ட உணவு மற்றும். ஹலால் முறைப்படி மட்டுமே சாப்பிட மற்றும் குடிக்க இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்படுகிறார். "ஹலால்" என்ற சொல்லுக்கு "சரியான" அல்லது "அனுமதிக்கப்பட்ட" என்று அர்த்தம்.

உதாரணமாக ஹலால் முறைப்படி.. கொல்லப்படும் போது விலங்குகள் உயிருடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், மேலும் இஸ்லாமிய முறையான தாபிஹா முறையில் விலங்குகளை வெட்ட வேண்டும். இது விலங்கின் கழுத்து நரம்பு, கரோடிட் தமனி மற்றும் மூச்சுக்குழாய் ஆகியவற்றை வெட்டுவதையும், சடலத்திலிருந்து அனைத்து இரத்தத்தையும் வெளியேற்றுவதையும் குறிப்பிடுகிறது. இதை பயன்படுத்தி வெட்டப்படும் விலங்குகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால் இந்த ஹலால் முறையை இந்துக்கள் மீது திணிக்க கூடாது என்று பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். முக்கியமாக பாஜகவினர் பலர் இந்த ஹலால் முத்திரைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஏர்இந்தியா சார்பாக வழங்கப்படும் உணவுகளில் ஹலால் உணவுகள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்படாது என்று ஏர்இந்தியா தெரிவித்து உள்ளது. ஹலால் உணவுகளை தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே அந்த உணவு வழங்கப்படும்.. மற்ற எல்லோருக்கும் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது இஸ்லாமியர்களுக்கு இத்தனை நாட்கள் முஸ்லீம் மீல்ஸ் என்று வழங்கப்பட்டது. இதற்கு பதிலாக இனி ஸ்பெஷல் மீல் வழங்கப்படும். அதில் ஹலால் முத்திரை இருக்கும். ஹலால் உணவுகள் அதை புக் செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மற்ற எல்லோருக்கும் இந்த உணவுகள் திணிக்கப்படாது.
விமானத்தில் உள்ள மற்ற உணவு விருப்பங்கள்: சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு, லேக்ட்டோஸ் இல்லாத உணவு, அசைவ உணவு, சைவ உணவு, ஜெயின் உணவு, கோஷர் உணவு, இந்து உணவு மற்றும் பல உணவு வாய்ப்புகள் உள்ளன.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஹலால் உணவு வழங்குவதில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. முன்னதாக சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு, லேக்ட்டோஸ் இல்லாத உணவு, அசைவ உணவு, , கோஷர் உணவு, இந்து உணவு ஆகிய உணவுகளில் அசைவம் இருந்தால்.. அதில் ஹலால் முத்திரை இருக்கும். இனி அப்படி எல்லா உணவுகளிலும் ஹலால் முத்திரை இருக்காது. இனி ஸ்பெஷல் மீல்ஸ் எனப்படும் இஸ்லாமியர்களுக்கான உணவில் மட்டுமே ஹலால் முத்திரை இருக்கும்.
விருப்பமில்லாதவர்கள் மீது குறிப்பிட்ட உணவுப் பழக்கங்களைத் திணிக்காமல், மதப் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்து ஏர் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விமான பயணத்தின் போது பல இந்துக்கள்.. ஹலால் உணவு வேண்டாம் என்று புகார்கள் வைத்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் ஏர்இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications