Chennai: என்ன ஒரே புகை மூட்டமாக இருக்கு! சென்னையில் காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு.. ராயபுரத்தில் உச்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழைக்கு இடையே மக்கள் பட்டாசுகளை வெடித்தனர். பட்டாசுகள் காரணமாக சென்னையில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. புகை மூட்டமாக பல இடங்களில் காட்சியளிப்பதால் குழந்தைகள், முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கடுமையான காற்று மாசு காரணமாக சென்னையில் சாலைகள் சரியாக தெரியாத அளவிற்கு பனிமூட்டம் போல காட்சி அளித்தது. கடுமையான கண் எரிச்சலும் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.. சென்னையில் காற்று மாசு அதிகரித்து காற்றின் தரக்குறியீடு சராசரியாக 159 என்று பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 6 ஆம் தேதி 56 என்றும், 7 ஆம் தேதி 74 என்றும் இருந்தது.

Air pollution in Chennai increased severely amid Diwali celebrations reaching its peak in Royapuram

பட்டாசு வெடித்து குவித்த மக்கள்

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழகத்தில் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் தலா ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதில் காலையில் பெரும்பாலானோர் பட்டாசுகள் வெடிக்காத நிலையில், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலான நேரத்தில் பட்டாசுகளை வெடித்து குவித்தனர். வாண வேடிக்கையால் வானம் எங்கும் கண்கவர் வெளிச்சம் விண்ணை மிளிர செய்தது. இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே அரசு அனுமதி வழங்கியிருந்ததால், ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சாலையே தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதி

இதனால் சென்னையில் புகை மண்டலமாக மாறியது என சொல்லும் அளவுக்கு காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. ஏற்கனவே மழை ஒரு பக்கம் பெய்ததாலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதாலும், ஒரே நேரத்தில் பட்டாசுகளை மக்கள் வெடித்ததாலும் புகை மூட்டமாக மாறியது. இந்நிலையில் சென்னையில் காற்று மாசு அதிகரித்து காற்றின் தரக்குறியீடு சராசரியாக 159 என்று பதிவானதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

காற்று மாசு தரக்குறியீடு அதிகபட்சமாக ராயபுரத்தில் 238, பெருங்குடியில் 175, மணலி 168, கொடுங்கையூர் 166, அரும்பாக்கம் 165 என பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 6 ஆம் தேதி 56 என்றும், 7 ஆம் தேதி 74 என்றும் இருந்த காற்றின் தரக்குறியீடு அதிகரித்து 159 என்ற அளவை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

குழந்தைகள், முதியவர்கள் பாதிப்பு

கடுமையான காற்று மாசு காரணமாக சென்னையில் சாலைகள் சரியாக தெரியாத அளவிற்கு பனிமூட்டம் போல காட்சி அளித்தது. கடுமையான கண் எரிச்சலும் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.. முகப்பு விளக்குகளை எரிய விட்ட போதிலும் சாலைகள் கண்ணுக்கு சரியாக புலப்படாத அளவிற்கு கடுமையான காற்று மாசு காணப்பட்டது.

தீபாவளிக்கு பட்டாசுகள் தொடர்ந்து வெடிக்கப்பட்டு வருவதால், நேரம் செல்ல செல்ல காற்று மாசு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்று மாசு அதிகரிப்பால், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+