சென்னையை அடுத்த திருப்போரூர் அருகே வெடித்துச் சிதறிய பயிற்சி விமானம்! பாராசூட்டில் குதித்த விமானிகள்
சென்னை: சென்னையை அடுத்த திருப்போரூர் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் வெடித்துச் சிதறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அந்தப் பயிற்சி விமானத்தில் இருந்த 2 விமானிகளும் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பி உள்ளனர். அதிக சத்தத்துடன் விமானம் வெடித்துச் சிதறியதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம், இன்று செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே வானில் பறந்துள்ளது. அப்போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எதிர்பாராதவிதமாக பயிற்சி விமானம் வெடித்துச் சிதறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. அதிக சத்தத்துடன் விமானம் வெடித்ததாக நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய பயிற்சி விமானத்தில் இருந்த 2 விமானிகளும் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் பாதுகாப்பாக தப்பி உள்ளனர். விமானம் விபத்தில் சிக்கியது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை அருகே கீரனூரில் புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் இன்று காலை சிறிய ரக விமானம் ஒன்று திடீரென சாலையில் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கும் போது, அந்த வழியில் வாகனங்கள் எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும், விமானத்தின் முன்பகுதி சேதம் அடைந்தது. விமானத்தில் இருந்த பயிற்சி விமானி உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர்.
BREAKING: செங்கல்பட்டு-வெடித்த சிதறிய விமானம் pic.twitter.com/HxVSoQ8i5x
— Publish2 (@saivijay2762104) November 14, 2025
விமானத்தில் இருந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமானப்படை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இந்த அவசரத் தரையிறக்கம் நடந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications