ஏர்டெல் வாடிக்கையாளர்களே.. 5.5 கோடி பேருக்கு இலவச ரீசார்ஜ் பேக் அறிமுகம்!
சென்னை: குறைந்த வருவாய் பெறும் வாடிக்கையாளர்களுக்கு இலவச ரீசார்ஜ் பேக் வழங்க ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவின் தொலைத்தொடர்பு முன்னணி நிறுவனங்களில் ஏர்டெல் முக்கிய நிறுவனமாகும். பிப்ரவரியில் கிடைத்த டேட்டாவின் படி ஏர்டெல்லிற்கு 34 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். தொலைபேசி சேவை, தொலைத்தொடர்பு இணைப்பு உள்ளிட்ட சேவைகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
போஸ்ட்பெய்டு, ப்ரீபெய்டு ஆகிய இரு ஆப்ஷன்களை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு ரூ 279, ரூ 179 ஆகிய இரு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

4 ஜி டேட்டா
இது வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புடன் ஆயுள் காப்பீட்டு சலுகையையும் வழங்குகிறது. ரூ 279 திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்கிற்கும் வரம்பு இல்லாத இலவச அழைப்பு, தினமும் 1.5 ஜிபி அதிவேக 4 ஜி டேட்டா வழங்குகிறது.

ரூ 4 லட்சத்திற்கு ஆயுள் காப்பீடு
மேலும் வாடிக்கையாளர்களுக்கு ரூ 4 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீட்டு திட்டத்தையும் கொடுக்கிறது. தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம் இலவச சந்தா வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. ரூ 179 ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 2 ஜிபி அதிவேக 4 ஜி டேட்டா, தினமும் 300 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

காப்பீடு திட்டம்
மேலும் ரூ 2 லட்சத்திற்கான காப்பீட்டு திட்டமும் கொடுக்கப்படுகிறது. இந்த இரு பிளான்களுக்கும் 28 நாட்கள் வேலிடிட்டியாகும். இந்த நிலையில் குறைந்த வருவாய் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இலவச ரீசார்ஜ் திட்டத்தை ஏர்டெல் அறிவித்துள்ளது.

இலவசம்
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் செய்திக் குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று காலத்தில் வருவாய் இல்லாமல் தவிப்போருக்கு இலவச ரீசார்ஜ் சலுகை கொடுக்கிறோம். ரூ 49 மதிப்பிலான கூப்பன், 5.5 கோடி கிராமப்புற மக்களுக்கு இலவசமாக கொடுக்கிறோம். இதன் வேலிடிட்டியும் 28 நாட்களாகும்.

ரூ 49 க்கு ரீசார்ஜ் திட்டம்
இந்த ரூ 49 ரீசார்ஜ் திட்டத்தில் ரூ 38 க்கு பேசிக் கொள்ளலாம், 100 எம்பி மட்டுமே டேட்டா வழங்கப்படும். அது போல் ரூ 79 க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டாக்டைம், டேட்டா ஆகியவை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சலுகைகளை அடுத்த வாரம் முதல் பெறலாம் என தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் தேங்க்ஸ் செயலி
ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்காக பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உதவ தனி இலவச ஹெல்ப்லைன் திட்டத்தையும் தொடங்கியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications