ஒரே ரீசார்ஜ்.. குடும்பத்தில் 4 பேர் பயன்பெறலாம்.. அசத்தும் ஏர்டெல்! டேட்டாவோடு ஓடிடி-யும் இலவசம்!
சென்னை: ஒரே பிளானில் குடும்பத்தில் உள்ள 4 நபர்கள் பயன்பெறும் வகையிலான அசத்தலான பிளான்களை கொண்டுள்ளது ஏர்டெல். இந்த போஸ்ட்பெய்டு பிளான்களில் ஒரு குடும்பமே அன்லிமிட்டெட் கால்ஸ், அதிக அளவிலான டேட்டா மற்றும் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் வசதிகளை பெறலாம். ஏர்டெல்லின் சூப்பரான 2 குடும்ப பிளான்களை பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கடந்த மாதம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. அனைத்து ப்ரீபெய்டு திட்டங்களின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து, மொபைல் போன் வாடிக்கையாளர்கள் அனைவரும் மலிவு விலையில் சிறப்பான ரீசார்ஜ் திட்டங்களைத் தேடி வருகின்றனர்.

ஏர்டெல் அதன் பயனர்களின் வெவ்வேறு விதமான தேவைகளுக்கு ஏற்ப, பல வகையான பிளான்களை வழங்குகிறது. அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா, ஒடிடி பலன்கள் என பல்வேறு வகையான வெவ்வேறு பலன்களுடன் வருகின்றன. ஒரே ரீசார்ஜில் குடும்பத்தில் உள்ள நான்கு பேர் பயன்படுத்தும் ரீசார்ஜ் பிளான் உள்ளது. இந்த போஸ்ட்பெய்டு திட்டத்தில், குடும்பத்தில் உள்ள நான்கு பேரும் ஒரே ரீசார்ஜ் திட்டத்தின் முலம் பயனை அடையலாம். இந்த பிளானில் 4 சிம் கார்டுகள் கிடைக்கும்.
ரூபாய் 1199 ஃபேமிலி பிளான்: வெறும் 1199 ரூபாய் கட்டணத்தில், உங்கள் குடும்பத்திற்கு நான்கு மொபைல் எண்களைப் பெறலாம். அதாவது ஒரு ரீசார்ஜ் மூலம் நான்கு பேர் போன்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பிளானில், யூசர்கள் ஒவ்வொரு மாதமும் 190 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். இதில் முதன்மை சிம் கார்டு இணைப்புக்கு 100 ஜிபி டேட்டாவும், மீதமுள்ள மூன்று இணைப்புகளுக்கு தலா 30 ஜிபி டேட்டாவும் கிடைக்கும்.
மேலும், இந்த திட்டத்தில் 6 மாதங்கள் அமேசான் பிரைம் (Amazon Prime) மற்றும் ஒரு வருடம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) ஆகிய ஓடிடி தளங்களுக்கான இலவச மொபைல் சந்தாவும் கிடைக்கும். அதோடு கூடுதலாக, நீங்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக்கை முழுமையாக அனுபவிக்க முடியும்.
ரூபாய் 1399 ஃபேமிலி பிளான்: ரூ.1399 ரீசார்ஜ் திட்டத்தில் 4 பயனர்கள் அன்லிமிட்டெட் அழைப்பு வசதியைப் பெறலாம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம். இந்த ரீசார்ஜ் திட்டத்தில் முதன்மை இணைப்புக்கு 150 ஜிபி மற்றும் 3 கூடுதல் இணைப்புகளுக்கு 30 ஜிபி டேட்டாவும் கிடைக்கும். கூடுதல் நன்மைகளாக, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், பிளே விங்க் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃபிக்ஸ் ஆகியவற்றின் இலவச மொபைல் சந்தா கிடைக்கும்.
ஏர்டெல்லின் இந்த ஃபேமிலி பிளான் மூலம் நீங்கள் அன்லிமிட்டெட் கால்ஸ் வசதியுடன், இணையத்தைப் பயன்படுத்தி திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் பலவற்றையும் ரசிக்க முடியும். இவை அனைத்தும் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் கிடைக்கும். குடும்பத்திற்கே ஒரே பிளானை தேர்ந்தெடுக்க விரும்பினால் இந்த பிளான் ஒரு நல்ல சாய்ஸாக இருக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications