முடங்கிய ஏர்டெல்.. கால் & நெட் எதுவும் கிடைக்கல.. சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் பாதிப்பு
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் சேவைகள் நாடு முழுக்க முடங்கின. இதற்கிடையே இன்று மீண்டும் ஏர்டெல் நெட்வொர்க் முடங்கியுள்ளது. பெங்களூர், டெல்லி, மும்பை, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் பல ஆயிரம் ஏர்டெல் யூசர்கள் கால், இணையம் உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் திணறினர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டில் பல்வேறு செல்போன் நிறுவனங்கள் இருந்தன. ஆனால், இப்போது நாட்டில் ஏர்டெல், ஜியோ, விஐ மற்றும் பிஎஸ்என்எல் என 4 நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அதிலும் குறிப்பாக ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

இப்போது நாட்டில் பெரும்பாலான மக்கள் மொபைல் மூலமாகவே இணையச் சேவையைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் மொபைல் நெட்வொர்க்குகள் முக்கியமானதாக இருக்கிறது. அதில் சிறு பிழை ஏற்பட்டாலும் கூட பேமெண்ட் தொடங்கி எல்லாமே முடங்கிவிடும். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ நெட்வொர்க் முடங்கிப் போனது. சில மணி நேரம் வரை நெட்வொர்க் பாதிப்பு இருந்தது.
இதற்கிடையே இப்போது மீண்டும் ஏர்டெல் நிறுவனத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. டவுன் டிடெக்டர் தளத்தின்படி, ஏர்டெல் சேவை முடக்கம் நண்பகல் 12:11 மணியளவில் உச்சத்திற்குச் சென்றது. சுமார் 7000க்கும் அதிகமானோர் ஏர்டெல் சேவை முடங்கியதாகப் புகார்கள் பதிவாகின. பெங்களூர், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி, மும்பை உட்பட முக்கிய நகர்களில் ஏர்டெல் சேவை முடங்கியுள்ளது.
ஏர்டெல் நெட்வொர்க்கில் சிக்கல் இருப்பதை ஏர்டெல் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக 'ஏர்டெல் கேர்ஸ்' வெளியிட்ட அறிக்கையில், "தற்காலிக இணைப்புச் சிக்கலால் இது ஏற்பட்டிருக்கலாம். ஒரு மணி நேரத்திற்குள் இது சரிசெய்யப்படும்.. சிரமத்திற்கு வருந்துகிறோம். நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல் தற்காலிகமானது ஒரு மணி நேரத்தில் செல்போனை ரீஸ்டார்ட் செய்தால் நெட்வொர்க் கிடைக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "பெங்களூரில் ஏர்டெல் முடங்கிவிட்டது. யாராலும் ஏர்டெல் சேவையை பயன்படுத்த முடியவில்லை" என பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், "ஏர்டெல் போஸ்ட்பெய்டு கடந்த 6 மணி நேரமாக முடங்கியுள்ளது. அழைப்புகளை மேற்கொள்ளவோ அல்லது இணையத்தைப் பயன்படுத்தவோ முடியவில்லை" என்று பதிவிட்டிருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications