Plane Crash: அஜித் பவார் பயணித்த விமானம் யாருக்கு சொந்தமானது? விமானத்தில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள் என்ன?
சென்னை: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் இன்று உயிரிழந்துள்ளார். தனது சொந்த தொகுதியில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விபத்தில் சிக்கியுள்ள விமானம், விஎஸ்ஆர் ஏவியேஷன் (VSR Aviation) நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். மணிக்கு 860 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த விமானத்தில் இருந்த பாதுகாப்பு அம்சங்களை இங்கு பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. சிறிய ரக தனி விமானத்தில் அஜித் பவார் இன்று தனது சொந்த தொகுதியில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டு சென்ற நிலையில் தரையிறங்கும் போது விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.

விமானத்தின் பாதுகாப்பு அம்சங்கள் என்ன?
இந்த கோர விபத்தில், அஜித் பவார் உள்பட விமானத்தில் பயணித்த 4 பேரும் பலியாகினர். விமானம் தரையிறங்கும் போது விழுந்து நொறுங்கியதில் சுக்கு நூறாக உடைந்து சிதறியதுடன், தீ பிடித்தது. இதனால், விமானத்தில் பயணித்த யாருமே உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லாமல் போனது.
விமானத்தின் கருப்புப் பெட்டிகளைக் (Black Box) கண்டறியும் பணியில் டி.ஜி.சி.ஏ (DGCA) தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நாட்டையே இந்த சோக நிகழ்வு உலுக்கியுள்ள நிலையில், அஜித் பவார் பயணித்த விமானம் எந்த நிறுவனத்திற்கு சொந்தமானது. அதன் பாதுகாப்பு அம்சங்கள் என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
விஎஸ்ஆர் ஏவியேஷன்
* விபத்தில் சிக்கிய விமானம் இந்தியாவின் முன்னணி Non-Scheduled விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான VSR Ventures Private Limited நிறுவனத்திற்கு சொந்தமான லியர் ஜெட் (Learjet 45XR) ஆகும்.
Ajit Pawar Death: நடிகை சவுந்தர்யா முதல் அஜித் பவார் வரை.. உயிரை பிடுங்கிய கொடூர விமான விபத்துகள்!
* Learjet 45XR என்பது அதிக வேகம், எரிபொருள் சிக்கனத் தன்மை மற்றும் உயரமான வானில் பறக்கும் திறன் ஆகியவற்றுக்காக அறியப்படும் உயர்தர சூப்பர்-லைட் வணிக ஜெட் விமானமாகும். இந்த விமானத்தின் இறக்கைகளுடன் சேர்த்து 47 அடி அகலம் கொண்டதாகும். இதன் எடை 9,752 கிலோவாகும்.

* இந்த நிறுவனம் வி.கே. சிங் என்பவரால் நிறுவப்பட்டு, அவருடைய தலைமையின் கீழ் VSR Ventures இந்த விமானத்தை நிர்வகித்து இயக்கி வந்தது.
* தனியார் ஜெட் சார்ட்டர்டு பிளைட் சேவைகள், வாடகை ஹெலிகாப்டர், மருத்துவ அவசர விமான சேவைகள் (ஏர் ஆம்புலன்ஸ்), விமான லீசிங் உள்ளிட்ட சேவைகளில் இந்த விமானம் நிறுவனம் பிரபலமான ஒன்றாகும்.
டெல்லி மகிபால்பூரில் தலைமையகம்
* லியர்ஜெட் 45XR, பீச்கிராஃப்ட் சூப்பர் கிங் ஏர் பி 200 விமானங்கள் மற்றும் அகஸ்டா 109 ரக ஹெலிகாப்டர்கள் இந்த விமான நிறுவனத்திடம் உள்ளன.
* டெல்லி மகிபால்பூரில் தலைமையகம் கொண்டுள்ள இந்த நிறுவனம், முழுமையான விமான ஆலோசனை மற்றும் விமான மேலாண்மை சேவைகளையும் வழங்கி வருகிறது.
* விபத்தில் சிக்கிய லியர்ஜெட் 45XR விமானத்தின் விலை தோராயமாக 2.1 மில்லியன் டாலர் முதல் 4 மில்லியன் டாலர் வரை இருக்கும்.
* விமான மோதல் தவிர்ப்பு அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆட்டோபைலட் வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விமானத்தில் ஐஸ் தடுப்பு அமைப்பு (Anti-Ice System) உள்ளது. வலிமையான அலுமினியம் கலவைகளால் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் FAR Part 25 பாதுகாப்பு தரநிலைகளின் கீழ் சான்றிதழ் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications