“கில்லி” பேனரை கிழித்த அஜித் ரசிகர்.. கொந்தளித்த விஜய் ஃபேன்ஸ்.. எல்லை மீறிய எபினேஷுக்கு காப்பு!
சென்னை: சென்னையில் தியேட்டர் முன்பு வைக்கப்பட்டிருந்த 'கில்லி' பட பேனரை கிழித்த அஜித் ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் விஜய்யின் 'கில்லி' திரைப்படம் அண்மையில் ரீ ரிலீஸ் ஆகி பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 20 வருடத்திற்கு முன்பு, அதாவது 2004ஆம் ஆண்டில் வெளியான படம் என்றாலும் தற்போதும் ரசிகர்கள் அதிக அளவில் வந்து கில்லி திரைப்படத்தை தியேட்டரில் உற்சாகமாக பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், மே 1 அன்று அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்த 'தீனா' படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. சென்னை காசி தியேட்டரில் தீனா படத்தின் ரீ ரிலீஸை பேனர் வைத்து, பட்டாசு வெடித்து கொண்டாடிய அஜித் ரசிகர்கள், உற்சாகமாக தீனா படம் பார்த்தனர்.
அப்போது, அஜித் ரசிகர் ஒருவர் சென்னை காசி தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த கில்லி படத்தின் பேனரை கிழித்து உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனால், விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர்.
இதற்கிடையே கில்லி பட போஸ்டர் கிழிக்கப்பட்டது தொடர்பாக தியேட்டர் மேலாளர் ராம்ராஜ் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் சென்னை ஜாஃபர்கான் பேட்டையைச் சேர்ந்த அஜித் ரசிகர் எபினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் எம்.ஜி.ஆர் நகர் போலீசார், விஜய் பட பேனரை கிழித்த அஜித் ரசிகர் எபினேஷை கைது செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications