Ajith Kumar: திருப்புவனம் அஜித் குமார் கொலை வழக்கு.. டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் குற்றவாளிகளாக சேர்ப்பு.. சிபிஐ அதிரடி
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் லாக் அப் டெத் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை கோர்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மானாமதுரை போலீஸ் டிஎஸ்பி. சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மேலும் 4 போலீசார் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் அஜித் குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. உயர் அதிகாரிகள் உத்தரவிடாமல் தனிப்படையில் சாதாரண போலீசார் எப்படி கொடூரமாக தாக்கி இருக்க முடியும் என்ற கேள்வி சாமானிய மக்கள் மத்தியில் எழுந்திருந்தது.

அஜித் குமார் கொலை வழக்கு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயிலில் காவலாளியாக அஜித்குமார் என்ற இளைஞர் பணியாற்றி வந்தார். 29 வயதான அஜித் குமார் மீது கடந்த ஜூலை மாதம் நிகிதா என்ற பேராசிரியை, நகை திருட்டு புகார் தெரிவித்தார். அதுகுறித்த விசாரணைக்காக அஜித் குமாரை தனிப்படை போலீசார் அழைத்து சென்றனர்.
பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விசாரித்த நிலையில் போலீசார் அஜித் குமாரை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அஜித் குமார் இறந்துவிட்டார். போலீசார் அடித்ததில், இளைஞர் பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித் குமாரை போலீசார் தாக்கும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சிபிஐ விசாரணை
அஜித் குமார் அடித்து கொல்லப்பட்டது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. மானாமதுரையை சேர்ந்த தனிப்படை போலீசாரான கண்ணன், பிரபு, ராஜா, ஆனந்த், சங்கரமணிகண்டன், போலீஸ் வாகன டிரைவர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு மதுரை மாவட்ட 5-வது கூடுதல் செசன்சு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்திருந்தது. இதற்கிடையே மேல் விசாரணையின் அடிப்படையில் கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தயார் செய்தது. இந்நிலையில், நேற்று மதுரை நீதிமன்றத்தில், நீதிபதி ஜோசப் ஜாய் முன்பு அஜித் குமார் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது.
கூடுதலாக 4 போலீசார் சேர்ப்பு
அப்போது சி.பி.ஐ. அதிகாரிகள், கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். ஏற்கனவே அஜித் குமார் கொலை வழக்கில், 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்த நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையின் மூலம் மேலும் 4 போலீசார் இந்த கொலை வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதன்படி, சம்பவத்தின்போது மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றிய சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், ஏட்டு இளையராஜா ஆகியோரையும் குற்றவாளிகளாக இந்த வழக்கில் சேர்த்து, கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்து உள்ளது.
டிஎஸ்பி பெயரும் சேர்ப்பு
அஜித்குமார் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்து உள்ளது. அஜித் குமார் வழக்கில் டிஎஸ்பி பெயரும் சேர்க்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நீதிமன்ற வட்டாரத்தினர் கூறுகையில், "அஜித் குமார் கொலையில் தனிப்படையை சேர்ந்த 6 காவலர்கள் மட்டும் கைது செய்யப்பட்டது அப்போது பல்வேறு யூகங்களை கிளப்பின.
4 பேரும் கைது செய்யப்பட வாய்ப்பு
உயர் அதிகாரிகள் உத்தரவிடாமல் தனிப்படையில் சாதாரண போலீசார் எப்படி கொடூரமாக தாக்கி இருக்க முடியும் என்ற கேள்வி சாமானிய மக்கள் மத்தியில் எழுந்தது. 6 போலீசாருடன் இந்த வழக்கு முடிந்துவிடும் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். ஆனால் தற்போது, சிபிஐ இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, துணை சூப்பிரண்டு(டிஎஸ்பி), இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரை சேர்த்து உள்ளது.
எனவே, விரைவில் இந்த 4 பேரும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், விரைவாக விசாரணை நடத்த வேண்டும். யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை கண்டறிந்து விரைந்து நியாயம் கிடைத்தால் மட்டுமே காவல் விசாணையில் நடைபெறும் இத்தகைய கொடூர மரண சம்பவங்கள் குறையும்" என்று தெரிவித்தனர்.
-
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
Ajith: அஜித்தின் வெற்றிக்கு பின்னால் இருந்த தாயின் கதை! மேற்கு வங்காளத்தில் பிறந்த மோகினி மணி யார்? வெளியான தகவல் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
Ajith Mother Passes Away: மூன்று வருடத்திற்குள் பெற்றோரை இழந்த அஜித்.. அம்மா இறந்ததும் வைரலாகும் குடும்ப ரகசியம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications