திருப்புவனம் அஜித் குமார் மரணம்.. தமிழக டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!
சென்னை: திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் அஜித் குமார் எனும் இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் விளக்கம் கேட்டு தமிழக டிஜிபிக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை வேண்டும் என்று கோரியிருந்த நிலையில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

கடந்த ஜூன்.26ம் தேதியன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கோயிலான பத்ரகாளியம்மன் கோயிலுக்கு நிகிதா எனும் பெண், தனது வயதான தாய் சிவகாமியை அழைத்து வந்திருக்கிறார். நிகிதா தனது காரை பார்க் செய்ய சொல்லி, கோயில் செக்யூரிட்டியாக இருந்த இளைஞர் அஜித் குமாரிடம் கூறியுள்ளார். ஆனால் தரிசனம் முடிந்து வந்து பார்த்தபோது காரில் இருந்த நகையை காணவில்லையாம். இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறார்.
புகாரின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் செக்யூரிட்டி அஜித் குமாரிடம் தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டனர். இதில் அஜித் குமாரின் உடல்நிலை மோசமடையவே மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாது, திமுகவின் கூட்டணி கட்சியினரே போராட்ட களத்தில் குதித்தனர். கடந்த 2021ல் திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதற்கு பின்னர் இன்று வரை சுமார் 25 பேர் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு உரிய நீதி வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம், நகையை காணவில்லை என்று புகார் அளித்த நிகிதா ஒரு மோசடி பேர்வழி என்று குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. பலரிடம் வேலை வாங்கி தருவதாக சொல்லி அவரும், அவரது தாயும், அவரது தந்தையும் கூட்டு சதியில் ஈடுபட்டிருப்பதாகவும் பலரும் கண்ணீர் மல்க பேட்டியில் கூறியுள்ளனர்.
அஜித் குமார் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத்திற்கு வீட்டு மனை பட்டா ஒதுக்கி கொடுத்திருக்கிறார். அதேபோல, அஜித் குமாரின் தம்பிக்கு அரசு பணி ஆணையை வழங்கியுள்ளார். இது காவல்துறை தவறு என்றும் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் உறுதி அளித்துள்ளார்.
மறுபுறம் அஜித் குமாரை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில்தான் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டிருக்கிறது.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி












Click it and Unblock the Notifications