விஜய் செய்யாத ஒரு விஷயம்! சிம்பிளாக செய்து காட்டிய அஜித்! ரொம்ப முக்கியமான மேட்டர்!
சென்னை: திரைப்பட நடிகரும், கார் ரேஸசருமான அஜித்குமார், அதிகாலையிலேயே வாக்கு சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தி சென்றிருப்பது, கவனம் பெற்றிருக்கிறது.
அஜித் நினைத்திருந்தால் பொறுமையாக மதியம், மாலை வந்து வாக்களித்துவிட்டு சென்றிருக்கலாம். ஆனால், தன்னை பார்க்க கூட்டம் சேர்ந்துவிடும், அது நெரிசலுக்கு வழிவகுத்துவிட கூடாது என்பதற்காக அதிகாலையிலேயே வந்து வாக்களித்துவிட்டு சென்றிருக்கிறார். இதே போல விஜய் செய்திருந்தால் பல அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

திரைத்துறையை பொறுத்தவரை அஜித்/விஜய் இவர்கள் இவருக்குதான் ரசிகர்கள் அதிகம். இருப்பினும் ரசிகர்களை அணுகும் விதத்தில் இருவரும் வேறுபட்டிருக்கிறார்கள்.
ரசிகர்கள் தங்களது பொன்னான நேரத்தையும், பணத்தையும் மன்றப் பணிகளுக்காகச் செலவிடுவதை விட, அவர்களது சொந்தத் தொழில், கல்வி மற்றும் குடும்ப நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்று கூறி, அஜித் தனது 40-வது பிறந்தநாளை முன்னிட்டு, 2011-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி தனது ரசிகர் மன்றங்களை (அஜித்குமார் நற்பணி இயக்கம்) கலைப்பதாக அதிரடியாக அறிவித்தார்.
சில இடங்களில் ரசிகர்கள் மன்றத்தைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதையும், கோஷ்டி மோதல்களில் ஈடுபடுவதையும் அவர் விரும்பவில்லை.
ஆனால், விஜய் இந்த விஷயத்தில் இப்படி நடந்துக்கொள்ளாதது விமர்சனமாக இன்றும் நீடிக்கிறது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை விஜய் தொடங்கிய பின்னர், அவரை பார்க்க முந்தியடித்த ரசிகர்கள் பலரும் ஏராளமான சிக்கலை எதிர்கொண்டனர்.
குறிப்பாக கரூரில், விஜய்யை பார்க்க அதிக அளவில் கூட்டம் திரண்டதால், நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கரூரில் விஜய் பிரச்சாரம் செய்ய ஒதுக்கப்பட்ட நேரத்தை விட மிகவும் தாமதமாக வந்ததே இந்த நெரிசலுக்கு காரணம் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
அப்படி இருக்கையில் அஜித் இன்று அதிகாலை முதல் ஆளாய் வந்து நின்று வாக்கு செலுத்திவிட்டு சென்றிருப்பது பரவலாக பாராட்டை பெற்றிருக்கிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications