Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் காலையிலேயே 300 கோடி அரசு நிலம் மீட்பு.. சரவணபவன் ஹோட்டலுக்கு ஜேசிபியுடன் சென்ற அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆலந்தூர் பகுதியில் குத்தகைக் காலம் முடிந்தும் வணிக ரீதியாக செயல்பட்டு வந்த கட்டடத்தை மீட்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நிலத்தை அரசு கையகப்படுத்த தீர்ப்பு வந்தது.இதையடுத்து இன்று காலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து கட்டடத்தில் செயல்பட்ட சரவணபவன் ஹோட்டல் ஊழியர்களை வெளியேற்றிய அதிகாரிகள், ஹோட்டலின் பெயர்ப் பலகையை அகற்றி கட்டடத்திற்கு சீல் வைத்தனர்.

ஆலந்தூர் மற்றும் பரங்கிமலை பகுதிகளில் குத்தகை காலம் முடிந்த அரசு நிலங்கள் மற்றும் அவற்றிலுள்ள கட்டிடங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் கடந்த சில வருடங்களாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையின் பணக்கார பகுதிகளில் ஒன்றாக பரங்கிமலை தாலுகா இருக்கிறது. குறிப்பாக பரங்கிமலை பகுதிக்கு உள்பட்ட ஆலந்தூர் சென்னையின் முக்கியமான வணிக மையாக இருக்கிறது. பொதுவாக பரங்கிமலையில், பழைய குத்தகை காலாவதியான நிலங்களை சட்டவிரோதமாகப் பதிவு செய்ததாகவும், இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறி, அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக சட்டரீதியான மற்றும் அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகள் கடந்த சில வருடங்களில் அதிக அளவில் எழுந்தன. ஏனெனில் நிலத்தின் மதிப்பு பல கோடியை தாண்டியிருந்தது.

Government land Alandur

இந்த நிலங்கள் எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் ஆட்சியின் போது குத்தகைக்கு விடப்பட்டவை ஆகும். , குத்தகை காலம் முடிந்த பின் அவை மீண்டும் அரசின் வசம் வந்திருக்க வேண்டும். இந்நிலையில் இங்கு குத்தகை காலம் முடிவடைந்த பின்னரும், சிலர் அரசு நிலங்களை காலி செய்யாமலும், குத்தகை/வாடகை தொகையைச் செலுத்தாமலும் வணிக நிறுவனங்களை நடத்தி வந்தார்கள். இது தொடர்பான இது தொடர்பாக, சில பொது நல அமைப்புகள் புகார் அளித்ததோடு, நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. ஒரு சில வழக்குகளில் தீர்ப்புகள் அரசுக்கு சாதகமாக வந்த வண்ணம் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த 2022ம் ஆண்டு முதலே பல்வேறு வணிக நிறுவனங்களை இடித்து, அரசு நிலத்தை மீட்கும் நடவடிக்கைகளைத் தொடங்கினார்கள். குறிப்பாக பரங்கிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், குறிப்பாக பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதிகளில், இது போன்ற நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன சுமார் 15 ஏக்கர் மதிப்பிலான அரசு நிலம் கடந்த காலங்களில் மீட்கப்பட்டன. இந்த நிலத்தின் மதிப்பு பல கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்தது.

Government land Alandur

இந்நிலையில் இன்று காலையிலேயே ஆலந்தூர் பகுதியில் சுமார் 300 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளது. சென்னை ஆலந்தூர் பகுதியில் குத்தகைக் காலம் முடிந்தும் வணிக ரீதியாக செயல்பட்டு வந்த கட்டடத்தை மீட்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நிலத்தை அரசு கையகப்படுத்தலாம் என தீர்ப்பு வந்தது.

இதையடுத்து இன்று காலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து கட்டடத்தில் செயல்பட்ட சரவணபவன் ஹோட்டல் ஊழியர்களை வெளியேற்றிய அதிகாரிகள், ஹோட்டலின் பெயர்ப் பலகையை அகற்றி கட்டடத்திற்கு சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் ஆலந்தூரில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+