"பர்சனலா" அண்ணாமலை பத்தி சொல்லனும்.. அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்! காரணம் சொன்ன அலிசா அப்துல்லா
அரசியலில் எனது பயணம் எளிமையான பாதையில் அமையவில்லை. என்னை ஆதரித்தவர், என்னை ஊக்குவித்தவர், எனது எல்லை வரை தள்ளியவர் அவர்.
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மட்டுமே தனக்கு ஆதரவளித்து தன்னுடன் துணை நின்றார் எனவும், அவருக்கு எப்போதுமே நன்றிக்கடன் பட்டிருப்பேன் என்றும் அக்கட்சியின் மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிசா அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
கார் மற்றும் பைக் பந்தைய வீராங்கனையாக இருந்து மக்கள் மத்தியில் புகழ்பெற்றவர் அலிஷா அப்துல்லா. சில திரைப்படங்களில் நடித்த அலிசா அப்துல்லா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
"தமிழ்நாடு பாஜக குடும்பத்தில் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு அண்ணாமலையும் அமர்பிரசாத் ரெட்டியும் அளித்த மரியாதை மற்றும் அங்கீகாரம் காரணமாகவே நான் பாஜகவில் இணைந்து இருக்கிறேன்.

மாநில பதவி
பெண்களின் முன்னேற்றத்துக்காக என்னால் இயன்றதை செய்வேன்.' என்று அவர் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து அலிசா அப்துல்லாவுக்கு பாஜக மாநில விளையாட்டுப் பிரிவு செயலாளர் பதவி கிடைத்தது. இதனை தொடர்ந்து பாஜக சார்பாக பல்வேறு நேர்காணல்களில் பங்கேற்று அவர் பேசி வருகிறார்.

அண்ணாமலைக்கு நன்றிக்கடன்
இந்த நிலையில் நேற்று அலிசா அப்துல்லா ட்விட்டரில் அண்ணாமலை குறித்து பதிவிட்டு இருந்தார். அதில், "தனிப்பட்ட முறையில் தலைவர் அண்ணாமலை பற்றி சொல்ல வேண்டும். அரசியலில் எனது பயணம் எளிமையான பாதையில் அமையவில்லை. என்னை ஆதரித்தவர், என்னை ஊக்குவித்தவர், எனது எல்லை வரை தள்ளியவர் அவர். அது கவலையாக இருந்த நிலையில் என்னை உயர்த்தியது. அவர் அடக்கமான மனிதர். அவருக்கு எப்போதும் நன்றியோடு இருப்பேன்" என்றார்.

அண்ணாமலை இல்லை என்றால்..
இதற்கு முன் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்து இருப்பதாவது, "என்னை போன்ற பெண்கள் விளையாட்டு துறைக்கு அல்லது அரசியலுக்கு வர முன்னோடியாக இருப்பேன். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மகன்தான் இப்படி செய்கிறார். கட்சி ரீதியாக எனக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு உள்ளது. தலைவர் அண்ணாமலை இல்லை என்றால் நான் அரசியலில் இருந்திருக்க மாட்டேன்." என்று கூறி இருந்தார்.

இந்தி சர்ச்சை
இதற்கு முன் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "3 வது மொழியாக இந்தி இருக்க வேண்டும். ஏனென்றால் பாதுகாப்பு முக்கியம். பெண்களுக்காக நான் பேசுகிறேன். தமிழ்நாட்டில் பாதுகாப்பு உள்ளது. ஆனால், அவர்களுக்கு வட மாநிலங்களில் பாதுகாப்பு இருக்கிறதா இல்லையா என தெரியாது. இந்தி தெரிந்திருந்தால் அதை தைரியமாக பேசிவிட்டு தப்பிக்க முடியும்.

பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க
ஐதராபாத்திலோ, டெல்லியிலோ நீங்கள் இரவு 9 மணிக்கு நடந்து செல்லும்போது உங்களிடம் 4 பேர் தகராறு செய்தால் நீங்கள் அவர்களிடம் இந்தியில் பேசினாலோ, இந்தியில் கத்தினாலோ தப்ப முடியும்." என்றார். அதேபோல் பாஜகவில் நடக்கும் பெண்களுக்கு எதிரான விசயங்கள் குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்து சர்ச்சையை கிளப்பினார்.

மருத்துவர் சர்ச்சை
அதேபோல், அலிசா போலி மருத்துவர் என்றும் சமூக வலைதளங்களில் பலர் குற்றம்சாட்டினர். மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊசி போடுகிறார் என்றும் பலர் தெரிவித்து வரும் நிலையில், அவை அரசியலுக்காகவும் பரப்பப்படும் வதந்திகள் என்று அலிசா அப்துல்லா விளக்கம் அளித்தார். காயத்ரி ரகுராம் பல தவறான கருத்துகளை கட்சிக்கு எதிராக பரப்பி வருகிறார். எனவும் அவர் விளக்கமளித்தார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications