தங்கம் மாதிரி.. ஒவ்வொரு தீர்மானமும் சுளீர்.. திமுக பொதுக்குழுவில் 27 பெரிய தீர்மானங்கள்- முழு லிஸ்ட்
சென்னை: திமுக பொதுக்குழுவில் 27 பெரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அந்த தீர்மானங்களின் முழு லிஸ்டை இங்கே பார்க்கலாம் .

- முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்!
- மக்களின் பேராதரவுடன் தொடர் வெற்றி நாயகராகத் திகழும் கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டுகள்!
- இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசுக்குப் பாராட்டு!
- தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதலமைச்சர் இளம் தலைவர் அவர்களின் பணி தொடரத் துணை நிற்போம்!
- தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் கழக அரசுக்குப் பாராட்டு!
- ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்!
- தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதலமைச்சர் இளம் தலைவர் அவர்களின் பணி தொடரத் துணை நிற்போம்!
- ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்!
- தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்!
- தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிடுக!
- கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்!
- இரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கண்டனம்!
- சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இசுலாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக!
- ஒன்றிய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!
- மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் அநீதிகளுக்கு கடும் கண்டனம்!
- மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்டிடுக!
- சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திடுக!
- தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது!
- ஆளுநரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு காரணமான கழகத் தலைவருக்குப் பாராட்டு!
- குடியரசுத் துணைத் தலைவரின் விமர்சனத்திற்குக் கண்டனம்!
- அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்!
- உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திடுக!
- மலரட்டும் மாநில சுயாட்சி!
- பேரிடர் மீட்புப் பணியில் கழக அரசுடன் கழகத்தினரும் துணை நிற்போம்!
- எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்!
- அ.தி.மு.க. ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கு வரவேற்பு!
- வஞ்சக பா.ஜ.க.வையும் துரோக அ.தி.மு.க.வையும் விரட்டியடித்து 2026-இல் கழக ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம்!
திமுக பொதுக்குழு கூட்டம்
48 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் இன்று திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் சுமார் 10 ஆயிரம் திமுகவினர் பங்கேற்கின்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவித்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. திமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு உத்தங்குடியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா அறிவாலயம் போன்று செட் அமைக்கப்பட்டு, முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதியை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாட திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. திமுகவில் புதிதாக 2 சார்பு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. திமுகவில் பேராசிரியர்கள், ஆசிரியர்களை கொண்ட கல்வியாளர் அணி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல, திமுகவில் மாற்றுத்திறனாளிகள் அணி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
திமுகவில் அமைப்பு ரீதியாக ஏற்கனவே 23 அணிகள் உள்ள நிலையில் மேலும் புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டு இன்று மதுரையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள அணிகளின் எண்ணிக்கை 23ல் இருந்து 25 ஆக உயர்ந்துள்ளது.
-
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி!












Click it and Unblock the Notifications