Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக கூட்டணியில் ‘விக்கெட்’! அதிமுக சைடு சாய்ந்த பார்வர்டு பிளாக்.. பிவி கதிரவன் எடப்பாடி மீட்டிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவுக்கு தங்கள் கட்சியின் ஆதரவை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பி.வி கதிரவன் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2024 மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துவிட்டன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

All india forward bloc PV Kathiravan extends support to AIADMK in Lok sabha election


பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. மார்ச் 2 ஆம் தேதி, 195 பேர் கொண்ட பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. தேர்தல் களத்தில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன.

திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (யுபிடி) உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளன. அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், தேசிய துணைத் தலைவருமான பி.வி.கதிரவன் இன்று காலை சென்னை கிரீன் வேஸ் இல்லத்திற்குச் சென்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

All india forward bloc PV Kathiravan extends support to AIADMK in Lok sabha election


அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி 'இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்று வந்தது. கடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளித்தது அக்கட்சி. கடந்த ஆண்டு மதுரையில் நடைபெற்ற அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநாட்டில் திமுக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர்.

இந்நிலையில் இன்று திடீரென அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடங்கிய கட்சி, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி. 1963 வரை இந்தக் கட்சியின் தமிழக தலைவராக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் செயல்பட்டார். இக்கட்சி மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

பி.என்.வல்லரசு, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார். இவர் உசிலம்பட்டி தொகுதியில் இருந்து 2 முறை எம்.எல்.ஏ ஆகியுள்ளார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மருமகனான பி.வி.கதிரவன் உசிலம்பட்டி தொகுதியில் இருந்து ஒரு முறை எம்.எல்.ஏ ஆகியுள்ளார்.

30 தொகுதிகளில் இரட்டை இலை.. எடப்பாடி டிக் அடித்த கூட்டணி லிஸ்ட்! உள்ளே வந்த சரத்குமார், கிருஷ்ணசாமி!


கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், திமுகவுடன் கூட்டணி அமைத்து, உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் பி.வி.கதிரவன். இந்நிலையில், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் சந்தித்து முதற்கட்ட பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளார்.

இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் பி.வி.கதிரவன் மாநில பொதுச் செயலாளராக இருக்கும் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+