திமுகவுடன் கூட்டணியில் பிரச்சனையா? திருமாவளவன் விளக்கம்!
திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறவு எப்போதும் போலத்தான் இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறவு எப்போதும் போலத்தான் இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறுமா என்று கடந்த சில நாட்களாக விவாதம் செய்யப்பட்டு வருகிறது. இவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்றும் கூட விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்பு நடத்தி உள்ளார்.

இதை தொடர்ந்து ஸ்டாலினை சந்தித்த பின் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். சந்திப்பிற்கான காரணத்தையும் அவர் பேட்டியில் குறிப்பிட்டார்.
அதில், திமுக - விசிக உறவில் எந்த பிரச்சனையும் இல்லை. திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். திமுகவுடன் உறவு வலிமையாக உள்ளது.
கஜா புயல் சேதம், நிவாரண நிதி, லோக் சபா தேர்தல், தமிழக சட்டமன்ற இடைதேர்தல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதம் செய்தோம். எங்கள் உறவு எப்போதும் போலத்தான் இருக்கிறது. சிலர் வதந்திகளை பரப்பி சந்தோசம் அடைய பார்க்கிறார்கள்.
இப்போது கூட துரைமுருகனை பார்த்து சிரித்து பேசிவிட்டுத்தான் வந்தேன். கூட்டணி குறித்து பிறகுதான் பேசவேண்டும். இப்போது அதை பற்றி பேச வேண்டிய தேவையில்லை. இதற்கும் மேல் நான் விளக்கமாக சொல்ல முடியாது.
கஜா புயலுக்கு தமிழக அரசு சரியாக நிவாரணம் வழங்கவில்லை. மீட்பு பணிகளை தமிழக அரசு மிகவும் தாமதமாக செய்கிறது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசு முடிவெடுத்து இருக்கிறது. இது காவிரி இறுதி தீர்ப்பிற்கு எதிரானது. கர்நாடக அரசு இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications