பெரிய ஆபத்து.. கடைகள் யுபிஐ பயன்படுத்துவதையே நிறுத்தும் அபாயம்.. மத்திய அரசுக்கு எஸ்பிஐ வார்னிங்
சென்னை: சிறு வணிக நிறுவனங்களுக்கு கடுமையாக ஜிஎஸ்டி விதிப்பது தவறாக முடியலாம் என்று எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு எட்டு ஆண்டுகளைக் கடந்த நிலையில், இந்த நடவடிக்கைகள் சிறு வணிகங்களை மீண்டும் ரொக்கப் பரிவர்த்தனை பொருளாதாரத்திற்குத் தள்ளக்கூடும், ஆன்லைன் பரிவர்த்தனைகள், குறிப்பாக யுபிஐ மூலம் கிடைத்த முன்னேற்றத்தை இது பாதிக்கும் என்று எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்திய கர்நாடக நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, ஜிஎஸ்டி முறையின் கீழ் மேற்கொள்ளப்படும் தீவிர வரி விதிப்பு நடவடிக்கைகளை எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கை விமர்சித்துள்ளது. பெங்களூரில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் கடைக்காரர்கள் பலருக்கு, யுபிஐ பரிவர்த்தனைகள் போன்ற டிஜிட்டல் தடயங்களின் அடிப்படையில் அதிகப்படியான வரி நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கை கூறுகிறது.

பொருளாதார நடவடிக்கைகளை துல்லியமாக கணக்கிட்டு வரி ஏய்ப்பை குறைக்கும் நோக்கம் பாராட்டத்தக்கது என்றாலும், இதுபோன்ற நடவடிக்கைகள் கவனத்துடன் கையாளப்பட வேண்டும். அதிகப்படியான கண்காணிப்பு சிறு வணிகங்களை முறைசாரா ரொக்கப் பரிவர்த்தனை பொருளாதாரத்திற்குத் தள்ளி, ஒழுங்குபடுத்தும் நோக்கத்தையே தகர்க்கும் அபாயம் உள்ளது என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
கர்நாடகாவில் நடவடிக்கை
இந்தியாவில் யு.பி.ஐ தீவிரமாக பயன்படுத்தப்படும் நகரங்களில் ஒன்று பெங்களூர். தற்போது அங்கே முழுக்க முழுக்க 90% சிறு - குறு கடைகளில் யு.பி.ஐ சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.
கர்நாடக வணிக வரித்துறை, மாநிலம் முழுவதும் உள்ள சிறு வணிகர்களுக்கு ஜிஎஸ்டி (GST) வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் பயன்படுத்தும் யு.பி.ஐ மூலம் வருவாயை கண்டறிந்து.. இந்த நோட்டீசை அனுப்பி உள்ளனர். இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பல வணிகர்கள் பணப் பரிவர்த்தனையை மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர்.
2021-22 முதல் 2024-25 வரையிலான நிதியாண்டுகளின் யுபிஐ (UPI) மற்றும் பிற டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் மட்டும் ரூ.20 லட்சம் (சேவைகள்) அல்லது ரூ.40 லட்சம் (சரக்குகள்) வர்த்தகம் செய்தவர்களுக்கு, பதிவு மற்றும் வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
யுபிஐ - பணப் பரிவர்த்தனை
பணப் பரிவர்த்தனை மட்டுமே மேற்கொண்டால் ஜிஎஸ்டி-யிலிருந்து தப்பிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிஜிட்டல் பரிவர்த்தனை தரவுகள் மூலம் வணிகத்தின் அளவை அரசு அறிந்திருக்கிறது. "எந்த வடிவில் வருமானம் வந்தாலும், வரி விதிக்கக்கூடிய வருவாய் மீது ஜிஎஸ்டி பொருந்தும்" என்று வணிக வரித்துறை ஜூலை 2025-ல் ஒரு தெளிவுபடுத்தலில் தெரிவித்துள்ளது.
பெங்களூரு மற்றும் பிற நகரங்களில் உள்ள தேநீர் கடைகள், பேக்கரிகள் மற்றும் சிறிய கடைகள் உட்பட பல விற்பனையாளர்கள் யுபிஐ பரிவர்த்தனைகளை தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக பல கடைகளில் "யுபிஐ இல்லை" என்ற அறிவிப்பு பலகையை காண முடிகிறது. ஆனால், இது தவறான அணுகுமுறை என்று வரி அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். பணமாகப் பெற்றாலும், டிஜிட்டல் முறையில் பெற்றாலும் வருமானத்தை கணக்கிடும்போது ஜிஎஸ்டி-யில் காட்ட வேண்டும்.
வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் (உதாரணமாக பழங்கள், ரொட்டி) விற்பனை செய்பவர்களுக்கு வழிகாட்டவும், சரியான வரி மட்டுமே வசூலிக்கப்படுவதை உறுதிசெய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோட்டீஸ்களுக்கு பதிலளிக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், மறைக்கப்பட்ட வருவாயை வெளிக்கொணரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications