தமிழகம் முழுவதும் 36 மாவட்ட பதிவாளர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்.. அரசு அதிரடி நடவடிக்கை
சென்னை: தமிழகம் முழுவதும் 36 மாவட்ட பதிவாளர்களை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிர்வாக காரணங்களுக்கு தமிழக அரசுத்துறைகளில் அவ்வப்போது பணியிட மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசு துறை செயலாளர்கள், காவல் அதிகாரிகள் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் இந்த பணியிட மாற்றங்களை அவ்வப்போது தமிழக அரசு மேற்கொள்ளும். அந்த வகையில், தமிழகம் முழுவதும் 36 மாவட்ட பதிவாளர்களை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வணிக மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளவது:- * கே.செந்தில் நாதன், சார் பதிவாளர் (மாவட்ட பதிவாளர் நிலை) தி.நகர், இவர் மாவட்ட பதிவாளர் (தணிக்கை) தஞ்சைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* ஜி.அறிவழகன் - மாவட்ட பதிவாளர் (தணிக்கை) செய்யார், - இவர் மாவட்ட பதிவாளர் ( நிர்வாகம்) செங்கல்பட்டுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* ஏ.கலைசெல்வி 1 எண் இணை சார்பதிவாளர் (மாவட்ட பதிவாளர் நிலை) வட சென்னை - மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) பட்டுக்கோட்டை
* சுரேஷ் பாபு, மாவட்ட பதிவாளர் (தணிக்கை) தென்காசி , இவர் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) பட்டுக்கோட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* ரத்தினவேல் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) ராமநாதபுரம், இவர் மாவட்ட பதிவாளர் (தணிக்கை) தென்காசிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவை உள்பட 36 மாவட்ட பதிவாளர்களை அதிரடியாக மாற்றி உத்தரவிட்டப்பட்டுள்ளது.

-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications