சிறுபான்மையினர், தலித் வாக்குகளை சிதறடிக்காத தொகுதி மறுசீரமைப்பு- திருமாவளவன் 'நச்' பாயிண்ட்
சென்னை: மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த முறை எல்லைகளை மறுவரை செய்தபோது சிறுபான்மையினர் அதாவது இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் வாக்குகள், பட்டியல் சமூகத்தினரின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டன. அதுபோல் இல்லாமல் அவர்களது வாக்குகளுக்கு மதிப்பிருக்கும் விதத்தில் எல்லை மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி வலியுறுத்தினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தொல். திருமாவளவன் எம்பி கூறியதாவது: மக்கள் தொகை அடிப்படையிலே நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்கிற முன்னெச்சரிக்கை உணர்வை மேற்கொண்டு இந்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டிய பொறுப்புணர்வோடு இந்த கூட்டம் நடைபெறுவது நம்பிக்கையை அளிக்கிறது.

50 மாநிலங்கள் கொண்ட ஒரு தேசம் அமெரிக்கா நூறாண்டுகளாக ஒரே எண்ணிக்கையை தான் அவர்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கேயும் இதே பிரதிநிதித்துவ சனநாயகம் தான் நடைமுறையில் இருக்கிறது.
எனவே, நமது முதல் நிலைப்பாடு எண்ணிக்கையை மாற்ற வேண்டாம். இதே எண்ணிக்கையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், தக்க வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணிக்கை சமநிலை மாறக்கூடாது. 39 இடங்கள் நமக்கு இருக்கின்றன எண்ணிக்கையை மாற்ற வேண்டாம் என்பதில் நாம் உறுதியாக இருப்போம். அதையே தொடர்ந்து வலியுறுத்துவோம்.
எண்ணிக்கையை உயர்த்துவதென்றால் தற்போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ள மக்களவைத் தொகுதிகளின் விகிதம் மாறாமல் உயர்த்த வேண்டும்.
கடந்த முறை மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளில் எல்லைகளை மறுவரை செய்தபோது சிறுபான்மையினர் அதாவது இசுலாமியர்கள் கிறித்தவர்கள் வாக்குகள், பட்டியல் சமூகத்தினரின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டன. அதுபோல் இல்லாமல் அவர்களது வாக்குகளுக்கு மதிப்பிருக்கும் விதத்தில் எல்லை மறுவரையறை செய்யப்பட வேண்டும்.
சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாநில அரசே தீர்மானிக்க வேண்டும். மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்ற வேண்டாம், தற்போது நடைமுறையில் உள்ளது போலவே தொடர வேண்டும்.
தென்னிந்திய மாநிலங்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கூட்டு நடவடிக்கை குழு அது முதற்கட்டமாக தேவையானதாக கருதுகிறேன். அந்த கூட்டு நடவடிக்கை குழுவையும் விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது ஆதரிக்கிறது.
-
ஸ்டாலின் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்.. உண்மை அவருக்கு தெரியாமாலேயே போயிருச்சு! அன்புமணி அட்டாக்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications