தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு.. முதல் நாளே நடக்கும் சூப்பர் சம்பவம்.. அரசு அதிரடி முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 10) அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இன்றே பாடப் புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலும் வந்ததால், பள்ளிகளுக்கு இறுதி தேர்வு இந்த முறை முன்னதாகவே நடத்தி முடிக்கப்பட்டது.. 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8-ந் தேதி வரை நடந்தது. அதேபோல் மற்ற வகுப்புகளுக்கும் விரைவாக நடத்தப்பட்டது.

schools student Tamil Nadu

அதாவது 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 5-ந் தேதி ஆண்டு தேர்வு நிறைவு பெற்றது. அதேநேரம் 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டு பின்னர் 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படட்ன. பின்னர் 23-ந் தேதி கடைசி தேர்வு நடத்தப்பட்டது.அதைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ந் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது..

மாணவர்களுக்கு கோடை விடுமுறை சுமார் ஒன்றரை மாதம் விடப்படும். பின்னர் ஜூன் மாதம் 1ம் தேதி அல்லது முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. வெயில் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பு சற்று தள்ளிவைக்கப்படும். இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந் தேதி வெளியாக இருந்ததால், 6-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை முதலில் அறிவித்து இருந்தது.

இதனிடையே கடும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 10-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. முன்னதாக இதற்காக வளாக பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றன.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள இன்றே விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட உள்ளன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 70 லட்சத்து 67 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. சுமார் 60 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு நோட்டுகளும், 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு புவியியல் வரைபடமும் வழங்கப்பட இருக்கிறது.

இதேபோல் தமிழக அரசின் சார்பில் புத்தகப்பை, காலணி, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ண பென்சில் மற்றும் கிரையான்கள், ஜாமின்ட்ரி பாக்ஸ் உள்ளிட்டவையும் தேவைப்படும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இதுதவிர புதிய இலவச பஸ் பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கனவே உள்ள பழைய அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் கட்டணமின்றி அரசு பஸ்களில் சீருடையுடன் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+