என்னங்க சொல்லுறீங்க.. வெறும் வயிற்றில் இந்த பழங்களை எல்லாம் சாப்பிடக்கூடாதா?
சென்னை: பழங்களை நாள்தோறும் எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது என்றாலும் சில பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல என்கிறார்கள், அத்துறை நிபுணர்கள். அது என்னென்ன பழங்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.
நாம் உண்ணும் உணவில் பழங்கள், காய்கறிகள் என பலவகை உணவு பொருட்களும் இடம் பெறுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. குறிப்பாக பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை என்று நாம் அனைவரும் அறிந்ததே... அதனால், நம் முன்னோர்களும் பழங்களை நாம் உண்ணும் உணவுப்பட்டியலில் தவறாமல் இடம் பிடிக்க செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிட்டு சென்று இருக்கிறார்கள்.

பழங்களை நாள்தோறும் எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது என்றாலும் சில பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல என்கிறார்கள், அத்துறை நிபுணர்கள்... எனவே தூங்கி எழுந்ததும் இந்த பழங்களை எல்லாம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்பதே அவர்கள் கூறும் அறிவுரையாக இருக்கிறது. அது என்ன பழங்கள் என்று பார்கலாம்.
மாம்பழம்: மாம்பழங்கள் முக்கனிகளில் ஒன்று. அதன் ருசியே தனிதான். அதுவும் தற்போது கோடைக்காலத்தில் மாம்பழ சீசன் என்பதால் பழக்கடைகளில் புகுந்த உடனேயே மலை போல மாம்பழங்களைத்தான் குவித்து வைத்து இருக்கிறார்கள். மாம்பழங்களை விரும்பி அனைவரும் வாங்கி வீட்டில் கொண்டு போய் ஒரு ருசி பார்த்து விடுகிறார்கள். வைட்டமின் சத்துக்கள் நிறைந்த மாம்பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் செரிமான பிரச்சினைகளால் வரலாமாம்.
திராட்சை பழங்கள்: அந்த வகையில் அதிக இனிப்பு சத்துக்களை கொண்ட திராட்சை பழமும் இந்த பட்டியலில் சேருகிறது. திராட்சை பழங்களும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள் ஏற்படக்கூடுமாம். எனவே அதையும் காலையில் எழுந்ததும் உணவுக்கு முன்பாக சாப்பிடுவதை தவிர்ப்பதே சிறந்தது.

ஆரஞ்சு, எலுமிச்சை: சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்த ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழங்களையும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உகந்தது இல்லையாம். ஏனெனில், இந்த இரண்டிலுமே உள்ள அமிலங்கள் உடல் நலக்குறைவை ஏற்படுத்திவிட வாய்ப்பு உள்ளது. அதேபோல அண்ணாச்சி பழத்திலும் பிரக்டோஸ் என்று சொல்லப்படும் ஒரு வித இனிப்புசத்து இருப்பதால் இதையும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது.
வாழைப்பழம்: பழங்களில் மிகவும் மலிவானதாகவும் சத்துக்கள் நிறைந்ததும் எதுவென்றால் வாழைப்பழங்கள்தான். பலரும் தினமும் வாழைப்பழங்கள் சாப்பிடாமல் இருக்கவே மாட்டர்கள். வாழைப்பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்கும். முலாம்பழத்தையும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது இன்சுலின் அளவை அதிகரித்து விடும்.

கொய்யாப்பழம்: வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம் உள்பட பல ஊட்டச்சத்துக்கள் கொண்டது கொய்யாப்பழம். கொய்யா மரங்களை பல வீடுகளிலும் காண முடியும். அதுவும் கிராமத்தில் கொய்யா மரம் இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். கொய்யாபழத்தை பொறுத்தவரை நார்ச்சத்துக்களும் நிறைந்தது.எனவே இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமான பிரச்சினைகள் வரக்கூடுமாம். கிவி பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டல் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவதோடு அமிலதன்மை பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். அதேபோல் பப்பாளி பழங்களையும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications