முதல் அலையை விட மிக மோசம்.. விரைவில் உச்சம் அடையும்.. "கொரோனா 2ம் வேவ்" ஏன் ஆபத்தானது?.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும்.. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு தொடங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும். நேற்று ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான கொரோனா கேஸ்களே இதற்கு உதாரணம்.. இந்தியாவை தாக்கி வரும் இந்த கொரோனா இரண்டாம் அலை குறித்த முழு விபரம் இந்த கட்டுரையில்!

முதலில் கொரோனா இரண்டாம் அலை குறித்து தெரிந்து கொள்ளும் முன், சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோம். கொரோனா வைரஸ் என்பது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு தொடுதல் மூலமும், இருமல் தும்மலில் பரவும் நீர் துகள்கள் மூலமும், நெருக்கமாக இருப்பதன் மூலமும் பரவும் வைரஸ்.

இந்த கொரோனா வைரஸ், ஒரு நாட்டை தாக்கி, அங்கு இருக்கும் பெருவாரியான மக்களை தாக்கி, உச்சம் அடைந்தால்அதுதான் பீக் எனப்படும். அதாவது உச்சபட்ச கேஸ்களை அடைத்துவிட்டு, அதன்பின் தினசரி கேஸ்கள் குறைந்தால் அதுதான் பீக் எனப்படும்.

பீக்

பீக்

பொதுவாக பீக் ஏற்பட்ட பின் கேஸ்கள் குறைந்து, இயல்பு நிலை திரும்பும். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் கடந்த வருட ஜூன், ஜூலை மாதங்களில் பீக் ஏற்பட்டு, அதன்பின் தினசரி கேஸ்கள் குறைந்தது. அது ஏன் இப்படி கேஸ் குறைகிறது என்று நீங்கள் கேட்கலாம்.. இதை விளக்க தமிழ்நாட்டை வைத்து ஒரு எடுத்துக்காட்டு பார்க்கலாம்.. தமிழ்நாட்டில் கடந்த ஜூன், ஜூலையில் நிறைய பேருக்கு கொரோனா வந்தது.

கொரோனா

கொரோனா

அப்போது பலருக்கு கொரோனா வந்து, அவர்கள் குணமான காரணத்தால் அவர்களின் உடலில் கொரோனா எதிர்ப்பு சக்தி உடலில் வந்தது. இதனால் அவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்படாது. இதன் காரணமாக கொரோனா புதிய நபர்களுக்கு பரவ முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக தடைப்பட்டது. அதோடு , லாக்டவுன் உள்ளிட்ட கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக கொரோனா பரவலின் சங்கிலி தொடர் தடைபட்டு, அப்படியே பரவல் வேகமும் குறைந்தது

லாக்டவுன்

லாக்டவுன்

லாக்டவுன் காரணமாகவே இந்த கொரோனா பரவல் அப்போது பாதியில் நின்றது. அது வெறும் தற்காலிகம்தான். கொரோனா இப்போது மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. இது ஏன் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். கொரோனா முதல் அலை ஏற்பட்ட போது அதை லாக்டவுன் மூலம் சமாளித்துவிட்டோம். இதனால் அப்போது பலருக்கு கொரோனா ஏற்படாமல் தப்பித்துவிட்டனர். அவர்களுக்கு ஒருவேளை கொரோனா ஏற்பட்டு இருந்தால், அப்போதே மக்கள் தொகையில் 75%க்கும் அதிகமானோருக்கு கொரோனா ஏற்பட்டு இருந்தால் எல்லோருக்கும் "மந்தை எதிர்ப்பு சக்தி" எனப்படும் ஹெர்ட் இம்யூனிட்டி வந்து மொத்தமாக கொரோனா மொத்தமாக பரவ முடியாமல் அழிந்து இருக்கும்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் ஹெர்ட் இம்யூனிட்டி கொண்டது வருவது எல்லாம் ரிஸ்க்.. இதில் பலர் பலியாக வாய்ப்புள்ளது. இதனால் லாக்டவுன் மூலம் கொரோனா பரவலை தற்காலிகமாக கட்டுப்படுத்தினார்கள். இந்த நிலையில் தற்போது லாக்டவுன் எல்லாம் முடிந்து மக்கள் வெளியே வர தொடங்கிய நிலையில், கடந்த வருடம் கொரோனாவிடம் இருந்து தப்பித்தவர்கள் எல்லாம் இப்போது சிக்கி, பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஹெர்ட் இம்யூனிட்டி இல்லாத காரணத்தால் மீண்டும் கொரோனா பரவ தொடங்கி உள்ளது.

இரண்டாம் அலை

இரண்டாம் அலை

முன்பு பாதிக்காத நபர்களுக்கு இப்போது கொரோனா வருகிறது. இப்போது புரிகிறதா உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அதிகமாக ஏன் இப்போது கொரோனா வருகிறது என்று? இதுதான் இரண்டாம் அலை.. முதலில் ஒரு வைரஸ் தாக்குதல் வந்து அது உச்சம் அடைந்து பின் வேகம் குறைந்து. சில மாதங்களுக்கு பின் மீண்டும் வேகம் எடுத்து உச்சம் பெறுவதே இரண்டாம் அலை. தற்போது இந்தியாவில் இந்த இரண்டாம் அலை கொரோனா வைரஸ்தான் பரவுகிறது. இதில் சிக்கல் என்னவென்றால் பொதுவாக முதல் அலை தாக்குதலை விட இரண்டாம் அலை தாக்குதல் மிகவும் மோசமாக் இருக்கும்.

இரண்டாம் அலை மோசம்

இரண்டாம் அலை மோசம்

முதல் அலையை விட கூடுதலான நபர்கள் இரண்டாம் அலையில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே மனிதர்களிடம் பரவியதால், அவர்களை எப்படி தாக்கலாம் என்ற ஜெனிட்டிக்கல் மெமரி இந்த வைரஸ்களிடம் இருக்கும். இதனால் முதல் அலையைவிட அதிக பேர் இரண்டாம் அலையில் பாதிக்கப்படுவார்கள். அதேபோல் இரண்டாம் அலையில் இறப்பும் அதிகமாக இருக்கும்.

எடுத்துக்காட்டு

எடுத்துக்காட்டு

1918ல் பரவிய இன்புளுயன்சா இதேபோல் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் முதல் அலையை விட இரண்டாம் அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. முதல் அலையில் பாதிக்கப்பட்டவர்களை விட இரண்டாம் அலையில் அதிக பேர் பாதிக்கப்பட்டனர், அதிக பேர் பலியானார்கள். பிளேக்கிலும் இதேபோல்தான். அதோடு கொரோனா தற்போது மியூட்டேட் ஆகிக்கொண்டு செல்கிறது.

Recommended Video

    தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று… ஒரே நாளில் 1344 பேருக்கு பாசிட்டிவ்!
    மியூட்டேட்

    மியூட்டேட்

    அதாவது முதலில் உருவான கொரோனா ஒவ்வொரு நாடுகளுக்கும் செல்ல செல்ல குணம் மாறியது , அதன் ஜெனிடிக்ஸ் மாறியது. இதன் பண்புகள், திறன் பெரிய அளவில் மாறியது. ஏன் வேக்சினுக்கு எதிராக இந்த கொரோனா செயலாற்றும் விதம் கூட மாறியது. தற்போது புதுப்பொலிவோடு கொரோனா பல வேரியண்ட்களாக மாறி வலம் வந்து கொண்டு இருக்கிறது... இதுதான் சிக்கலே!

    சிக்கல்

    சிக்கல்

    இந்த புதிய மியூட்டேட் கொரோனா வைரஸ்களால் பாதிப்பு வேகமாக பரவலாம் (சமயங்களில் மெதுவாகவும்), அதிக பேர் பலியாகலாம். இரண்டாம் அலையில் மியூட்டேட் வைரஸ் எப்படி செயல்படும் என்பது போக போகவே தெரியும். இப்போது கொரோனாவில் இரண்டாம் அலைதான் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டாம் அலையின் வேகத்தை பார்த்தால் ஏப்ரல் பாதியில் உச்சம் அடையும் என்கிறார்கள். சரி இந்த கொரோனா இரண்டாம் அலைதான் கடைசியா? என்று கேட்டால்.. கொஞ்சம் மனதை திடப்படுத்திக்கொண்டு படியுங்கள்.. இரண்டாம் அலை கடைசி அல்ல.. பொதுவாக பெருந்தொற்று நோய்கள் மூன்றாம், நான்காம் அலை வரை செல்லும். மக்கள் பலருக்கு இம்யூனிட்டு வரும் வரை இது பரவும்.

    பரவும்

    பரவும்

    இன்புளுயன்சா நான்கு அலை (2ம் அலை மிக மோசம், 3 மற்றும் 4ம் அலை முதல் அலையை விட மோசம்) வரை பரவியது. பிளேக் பல்வேறு காலகட்டங்களில் அலை அலையாக வந்தது. கொரோனாவும் இப்படி பரவலாம். மொத்தமாக வேக்சின் போட்டு நோய் பரவலை தடுப்பதை தவிர இது கொரோனா அலையை தடுக்க வேறு வழியே கிடையாது. மீண்டும் லாக்டவுன் கொண்டு வந்த பின் 6 மாதம் கழித்து திறந்தாலும், அப்போது மூன்றாம் அலை ஏற்படும்.. மொத்தமாக வேக்சின் மூலம் இதை அழிப்பதே ஒரே தீர்வாகும்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+