கிரெடிட் கார்டை தலையை சுற்றி தூக்கி எறிய தோன்றுதா.. கடன் வாங்கும் முன் இந்த விஷயத்தை பாருங்க!
சென்னை: கிரெடிட் கார்டு வைத்திருக்கிறீர்களா அப்படியென்றால் அதுகுறித்த விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது நல்லதல்லவா?
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என இரு அட்டைகள் உள்ளன. இதில் கிரெடிட் கார்டு என்பது வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வரம்பிற்கும் கடன் வாங்க அனுமதிக்கிறது. அதாவது அந்த வரம்பானது அவர்களுடைய ஊதியத்தை பொருத்தும் , ஏற்கெனவே கடனை திருப்பி செலுத்தியதை பொருத்தும் தீர்மானிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டு கடன் அட்டை. டெபிட் கார்டு- நீங்கள் வங்கிக் கணக்கில் சேமித்து வைத்துள்ள பணத்தை ஏடிஎம்மில் எடுப்பதற்கோ செலவு செய்வதற்கோ ஆகும்.

வாடிக்கையாளர்கள் அந்த கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும். இன்று கிரெடிட் கார்டு இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி அந்த கார்டு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. அதாவது மாத கடைசியில் பணம் இல்லாத நேரத்தில் பெட்ரோல் போடுவதற்கும், மளிகை பொருட்களை வாங்குவதற்கும் இது பெரிதும் உதவியாக இருக்கிறது.
ஆனால் கிரெடிட் கார்டுகளை பற்றி நன்கு தெரிந்து கொண்டு அதை பயன்படுத்தினால், அது கழுத்தை நெரிக்காது. இது தெரியாமல் பலர் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு கஷ்டப்படுவார்கள். இதனால் மற்றவர்கள் படும் அவதியை பார்த்துவிட்டு இந்த கார்டுகள் குறித்து பலருக்கு எதிர்மறையான எண்ணங்கள் பலருக்கு உள்ளது.
கிரெடிட் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா. அதாவது வருடாந்திர பராமரிப்பு கட்டணம் ஒன்று ஆண்டுக்கு ஒரு முறை வசூலிக்கப்படுகிறது. அந்த தொகை கார்டுக்கு கார்டு மாறுபடும். சில வங்கிகள் சில நேரங்களில் இலவச கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன.
அதாவது குறிப்பிட்ட காலத்திற்கோ அல்லது வாழ்நாள் முழுவதுமோ பராமரிப்பு கட்டணம் கட்டத்தேவையில்லை என்பதுதான். உங்களுக்கு அந்த கார்டில் இருக்கும் மொத்த கடன் வரம்பின் ஒரு பகுதியை நீங்கள் தேவைப்பட்டால் பணமாக எடுத்துக் கொள்ளலாம். கிரெடிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் நேரடியாக ஏடிஎம்மில் இருந்து எடுத்து கொள்ளலாம்.
முன் பணம் எடுப்பது என்பதற்கு எடுக்கும் தொகைக்கு 2.5 சதவீதம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பரிவர்த்தனை செய்த நாள் முதல் ரொக்க முன் பணத்திற்கான வட்டி வசூலிக்கப்படும். கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதற்கு வட்டியில்லா காலம் பொருந்தாது. உங்களுக்கு கொடுக்கப்பட்ட வரம்பிற்கு மேல் கூட நீங்கள் செலவு செய்யலாம்.
ஆனால் இந்த வசதி இலவசமாக கிடைப்பதில்லை. இத்தகைய பரிவர்த்தனைகளுக்கு அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான வங்கிகள் குறைந்தபட்சமாக ரூ 500 வசூலிக்கின்றன. இது கடன் வரம்பை தாண்டி நீங்கள் எவ்வளவு தொகை பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொருத்தது. நீங்கள் கார்டு மூலம் செலவு செய்யும் தொகையை முழுசாக செலுத்த முடியாவிட்டாலும் குறைந்தபட்ச தொகையை செலுத்த வங்கிகள் வாய்ப்பளிக்கின்றன. ஆனால் இந்த கட்டணத்தையும் செலுத்தத் தவறினால் அதற்து லேட் ஃபீஸ் எனப்படும் தாமத கட்டணத்தை வங்கிகள் விதிக்கும். உங்கள் ஸ்டேட்மென்ட் பேலன்ஸ் அடிப்படையில் ஒரு நிலையான தொகை வசூலிக்கப்படுகிறது.
வட்டி விகிதங்கள் அதிகம்தான். அதாவது நீங்கள் மாதம் செலுத்த வேண்டிய தொகை ரூ 15000 என வைத்துக் கொள்வோம். நீங்கள் அதில் வெறும் ரூ 5 ஆயிரம் மட்டும் செலுத்திவிட்டால் மீதமுள்ள ரூ 10 ஆயிரத்திற்கு ஆண்டுதோறும் 33 முதல் 42 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. அனைத்து கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அது போல் டிவி, பிரிட்ஜ், போன் உள்ளிட்ட பொருட்களை கிரெடிட் கார்டு மூலம் வாங்கிவிட்டு அதை மாத தவணைகளாகக் கூட மாற்றிக் கொள்ளலாம். இது போன்ற வசதிகளில் நன்மையும் இருக்கும் தீமையும் இருக்கும். நாம்தான் பகுத்தறிந்து நல்லபடியாக பயன்படுத்தி வளமாக வாழ வேண்டும்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications