ஒரே அழுத்துதான்.. காஷ்மீர் டூ கன்னியாகுமரி ஈஸியா போகலாம்.. எக்ஸ்பிரஸ்வேவால் தமிழ்நாட்டிற்கு ஜாக்பாட்
சென்னை: கன்னியாகுமரி - காஷ்மீர் வரை அமைய இருக்கும் மிக நீண்ட எக்ஸ்பிரஸ் வே எப்படி இருக்கும்? இது எப்படி அமைக்கப்படும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரியை இணைக்கும் வகையில் விரைவுச் சாலையை அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தெரிவித்தார். 2022 நவம்பர் 30 நிலவரப்படி, நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 92,000 கிலோமீட்டரிலிருந்து 1,44,634 கிலோமீட்டராக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில்தான் கன்னியாகுமரி - காஷ்மீர் வரை அமைய இருக்கும் மிக நீண்ட எக்ஸ்பிரஸ் வே குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன. வரப்போகும் எக்ஸ்பிரஸ் வே புதிய சாலை அமைப்பால் டெல்லிக்கும் சென்னைக்கும் இடையிலான தூரம் 1,312 கிலோமீட்டர்கள் குறையும்.
இதனால் டெல்லிக்கு மிக எளிதாக செல்ல முடியும். முக்கியமாக பெரிய நகரங்கள் உள்ளே செல்லாமல் நெடுஞ்சாலை வழியாகவே டெல்லிக்கு எளிதாக பயணம் செய்ய முடியும். காஷ்மீருக்கும் இதே கதைதான். கன்னியாகுமரி டூ காஷ்மீர் செல்ல எந்த நகரத்திற்கு உள்ளேயும் செல்ல வேண்டியது இல்லை. முழுக்க முழுக்க தேசிய எக்ஸ்பிரஸ்வேவிலேயே செல்ல முடியும்.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் கட்கரி, 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் நமது சாலைக் கட்டமைப்பு அமெரிக்காவின் தரத்துக்குச் சமமாக இருக்கும்" என்று கூறினார். தற்போது உள்ள போக்குவரத்து படி கன்னியாகுமரி டூ காஷ்மீருக்கு நேராக செல்ல ராஜஸ்தான் வழியில் செல்ல முடியும். அல்லது டெல்லி வழியாக செல்ல முடியும்.
இந்த இரண்டு பாதைகளும் பிரேக் எடுக்காமல் காரில் சென்றால் 70 மணி நேரம் ஆகும். அதாவது பெரிய பிரேக் எடுக்காமல் சிறிய சிறிய ஓய்வு எடுத்து சென்றால் இந்த நேரத்தில் சென்று விடலாம்.
அதுவே புதிய எக்ஸ்பிரஸ்வே வந்து பெரிய பிரேக் எடுக்காமல் சிறிய சிறிய ஓய்வு எடுத்து சென்றால் 40 மணி நேரத்தில் செல்ல முடியும். 8 வழி சாலையாக இந்த எக்ஸ்பிரஸ் வே அமைக்கப்படும். ஒரே மூச்சில் ஒன்றரை நாளில் காஷ்மீர் டூ கன்னியாகுமரி செல்ல முடியும்.
பெங்களூர் சாலை: இந்த சாலை திட்டம் அடுத்த வருடம் தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன. சாலையின் பெரும்பாலான பகுதிகள் தமிழ்நாடு வழியாகவே செல்லும். சில பகுதிகள் கேரளா உள்ளே செல்லும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த சாலை திட்டம் ஒரு பக்கம் நிறைவேற்றப்படும் நிலையில் இன்னொரு பக்கம் பெங்களூர் சாலை திட்டமும் நிறைவேற்றப்பட உள்ளது. தென்னிந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சாலைகளில் ஒன்றாக பெங்களூர் சென்னை பசுமைவழி சாலை உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள இரண்டு பெரிய நகரங்களை இந்த சாலைகள் இணைக்க உள்ளன.
ஏற்கனவே இங்கு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்ய 10 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. அதிகட்சம் 8 மணி நேரத்தில் இரண்டு நகரங்களுக்கு இடையே பயணம் செய்ய முடியும். இப்படிப்பட்ட நிலையில்தான் இரண்டு நகரங்களுக்கு இடையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications