இழுபறியில் கூட்டணி ! குழப்பத்தில் கட்சித் தலைவர்கள்? உச்சத்தில் ‘பூவா? தலையா? போர்’
சென்னை: பாமக, தேமுதிக, தமாகா,புதிய தமிழகம் என சில கட்சிகள் கூட்டணி குறித்து முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் தவித்து வருகின்றன.
அரசியலில் கொள்கைக் கூட்டணி என்பது எல்லாம் கானல் நீராகி ஆகிவிட்டது. நேற்று ஒரு கட்சியின் கீழ் இருந்த தலைவர், அடுத்த நாள் அந்த ஆட்சியைக் கவிழ்த்து முதல்வராக மாறுவதுதான் இன்றைய அரசியலில் ட்ரெண்ட் ஆக உள்ளது.

பொதுவாகக் கூட்டணி என்பது மூன்று வகைகளில் அமைக்கப்படும். ஒன்று, Natural alliance. இதைத்தான் கொள்கைக் கூட்டணி என்பார்கள். தேர்தல் முடிந்த பிறகும் அந்தக் கட்சிகள் கூட்டணிக்குள்ளாகவே தொடர்வார்கள்.
அப்படிப் பார்த்தால் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி, இந்த நாடாளுமன்றத் தேர்தல் வரை திமுக அணியில் ஒரு Natural alliance என்பது இருந்து வருகிறது. அதாவது கொள்கைக் கூட்டணி. அவர்களின் பொது எதிரி பாஜக. குறிப்பாக மோடியை வீழ்த்துவதே இந்த அணியின் இலக்கு.
இரண்டு, Veil alliance. இதைத் தமிழில் முக்காடு கூட்டணி என்று சொல்வார்கள். இப்போது அதை 'பி' டீம் என்று சொல்கிறார்கள். இந்தப் பெயர் அதிமுகவுக்குப் பொருந்தும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் உறவு. அதற்கு முன்னதாக கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவுடன் தோழமை.

ஆனால், சில மாதங்கள் முன்னர் அண்ணாமலையைக் காரணம் காட்டி கூட்டணியை விட்டு வெளியேறியது அதிமுக. அதன்பின்னர் பாஜக Vs திமுக என்ற நிலை மாறி, அதிமுக Vs பாஜக என்ற போர் மேகம் தமிழக அரசியலைச் சூழ்ந்தது.
இப்படி Natural alliance அடுத்து Veil alliance இவற்றைத்தாண்டி மூன்றாவது வருவதுதான் Rainbow alliance. அதாவது வானவில் கூட்டணி. இதைப் போல ஒருமுறை தங்களது கூட்டணியைக் குறிப்பிட்டார் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி. மழை நின்றால் வானவில் மறைந்துவிடும். அதைப் போலத் தேர்தல் முடிந்தால் கூட்டணி மறைந்துவிடும்.
இப்போது அதிமுக மற்றும் பாஜகவுக்கு இடையே உள்ளது வானவில் கூட்டணி? அல்லது முக்காடு கூட்டணியா என ஒரு தெளிவும் இல்லை.
இவர்களை நம்பிக் கடை போட்டிருந்த பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் என சில கட்சிகளின் தலைவர்கள் தங்களைக் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப் போல பதறிக் கொண்டுள்ளனர்.

தமாகா தலைவர் ஜி.கே. வாசன் இந்தத் தேர்தலில் நிற்கப்போவதில்லை. அவருக்கு அதிமுக சார்பாக முன்பு ராஜ் சபா சீட் கொடுக்கப்பட்டது. அதைப் போல் மீண்டும் அவர் மாநிலங்களவைதான் குறிவைக்கிறார். தேர்தலில் நின்று வெற்றி பெறுவது எல்லாம் அவரது ஜாதகத்திற்கு ஒத்து வராது.
அவருக்கு என்று தமிழ்நாட்டில் அரசியல் செல்வாக்கு எல்லாம் இல்லை. அவரது அப்பா ஜி.கே.மூப்பனாருக்கு ஒரு தேசிய அரசியலில் தொடர்பு இருந்தது. அதை வைத்து அவரது மகன் வாசன் அரசியலில் காய் நகர்த்தி வருகிறார்.
ஆகவே, தனக்கு ராஜ் சபா சீட்டு அளித்த அதிமுகவையும் பாஜகவையும் இணைக்க அவர் தூது போய்க் கொண்டிருக்கிறார்.

ஒரு பக்கம் ஜெ.பி நட்டவையும் போய் சந்திக்கிறார் தமாகா ஜி.கே.வாசன். மறுபக்கம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் போய் சந்திக்கிறார். விளக்கம் கேட்டால், 'நட்டாவை தொடர்ந்து சந்தித்து வருகிறேன். இந்த ஒரு மாதத்திற்குள் மட்டும் எடப்பாடியை 2 முறை சந்தித்திருக்கிறேன்.
நேர்தல் சமயத்தில் கூட்டணி பற்றிப் பேசவில்லை என்று எப்படி என்னால் சொல்ல முடியும்? எனது சந்திப்பின் நோக்கம், நாட்டின் நலன். எதிரியை வீழ்த்துவது. அதற்குப் பலமாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்' என்று விளக்கம் அளித்து வரும் அவர், இன்னும் சில தினங்களில் கட்சி தனது அறிவிப்பை வெளியிடும் என்று கூறியுள்ளார்.
கூட்டணி உறுதி ஆவதற்கு முன்பே சில தொலைக்காட்சிகள் தவறான தகவலைச் சொல்வது சரியில்லை என்றும் மென்மையாகக் கோபப்பட்டுள்ளார்.

இவரைப் போலவேதான் பாமக தலைவர் அன்புமணி. அவரும் சில தினங்களில் அறிவிப்போம் என்கிறார். 'நாங்கள் பொட்டி வாங்குவதற்காகப் பேரம் பேசி வருகிறோம் என்று கொச்சைப் படுத்தாதீர்கள்.
நான் போட்டி வாங்குவதாக இருந்தால் மத்திய அமைச்சராக இருந்தபோது புகையிலை நிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஆதரவாக இருந்திருப் பேன்.
அதைச் செய்யாமல் பொது இடங்களில் புத்தகத்தைப்பிடிக்கக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்தோம். ஆகவே, எங்களை அசிங்கப்படுத்தும்படி செய்தி போடாதீர்கள்' என்று இவரும் ஆதங்கப்பட்டுள்ளார்.
உண்மைதான். அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது அந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதில் தீவிரமாக இருந்தார்.

அதிமுக பலமான கட்சி பாஜகவைவிட்டு வெளியே சென்று விட்டோம் என்று அறிவித்துவிட்டது. அதன்பின் பல மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது பாமக கண் முன்னால் ஒன்று பாஜக அல்லது அதிமுக இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன.
ஆனால், அதையும் மீறி திமுகவுடன் பேச்சு நடத்தப்படுகிறது எனச் செய்தி அடிப்படுகிறது. குறைந்த பட்சம் கொள்கைப் பற்றுள்ள பாமக, திமுகவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை என்று அந்த வதந்திக்காவது முற்றுப்புள்ளி வைக்கலாமே? அதைச் செய்யாத போது ஊடகத்தைப் பார்த்து கொச்சை செய்வதாகக் குற்றஞ்சாட்டுவது நியாயமா?

அண்ணாமலை தெளிவாக அடிக்கிறார். "மாற்றம் என்றால் தனியா வா. துணைக்கு இந்தப் பக்கம் ஒரு குச்சி. அந்தப் பக்கம் ஒரு குச்சி வைத்துக் கொண்டு இரண்டு பக்கமும் உள்ளவர்கள் மீது கைபோட்டுக் கொண்டு நொண்டி நொண்டி வந்தால் மக்கள் ஓட்டுப்போடமாட்டார்கள்.
சவுத்தில் பாஜகவுக்கு 2 சீட் வருமா? வெஸ்ட்ல 2 சீன் வருமா? இப்படி எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் பாஜக Complete Sweep தான் நான் எதிர்பார்க்கிறேன்" என்று தைரியமாக அறிவிக்கிறார்.
அதைவிடப் பெரிய கட்சியான பாமக இழுபறியில் இருப்பதால் மக்கள் சந்தேகப்படுகிறார்கள். முதல்வர் கனவு உள்ள அன்புமணி, ஏன் அண்ணாமலை போல் அடித்துப் பேச மறுக்கிறார் என மக்கள் நினைப்பார்களா ? மாட்டார்களா?
அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான கூட்டணிக் குழப்பம் ஏதோ ஒரு மாதத்திற்கு முன்னால் உருவானதல்ல. கடந்த 10 மாதங்களுக்கு மேலாக இந்த இருகட்சிகளுக்கும் இடையே கூட்டணி குறித்த குழப்பம் நீடித்து வருகிறது.
'தூக்கத்திலிருந்து எழுப்பிக் கேட்டாலும் சரி, அந்தப் பெட்டியைக் கழற்றி விட்டாச்சு. பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. நாங்கள் தோழமையோடு இருந்தோம். இப்போது பாஜக எங்கள் எதிரி' என்கிறார் ஜெயக்குமார்.
பாஜகவை எதிரி என்கிறார் ஜெயக்குமார். ஆனால், எடப்பாடி பழனிசாமியிடம் பேசிவிட்டு வந்த ஜி.கே.வாசன் 'பொது எதிரியை வீழ்த்துவோம்' என்கிறார். இங்கேயே பல முரண்கள் வருகின்றனவே?
'200 தொகுதியில் நடைப்பயணம் முடித்த அனுபவத்தில் சொல்கிறேன். மக்கள் பாஜக பக்கம் உள்ளனர்' என்கிறார் அண்ணாமலை.
ஆனால் அதிமுக பொன்னையன் பாஜகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்கிறார்.
சரி, தேமுதிகவும் வருவோம். ஒருவாரத்தில் உங்களை அழைத்து கூட்டணி பற்றி விளக்குவேன் என்றார் பிரேமலதா. அதன்பின்னர் 14 சீட்டு என்றார். ஒரு ராஜ் சபா என்றார். பிறகு ஏன் அவ்வளவு சீட்டு கேட்கக்கூடாது என்றார்.
14 சீட்டுகள் என்றால், கிட்டத்தட்ட 84 சட்டமன்றத் தொகுதிகள். கிட்டத்தட்ட அதிமுகவின் சட்டமன்ற பலம் இது. அப்படி உள்ள போது பிரேமலதா எப்படி 14 எம்.பி.சீட்டுகள் கேட்கிறார் என்பதே விளங்கவில்லை.
இதுவரை அதிமுக மோடிக்குப் பயப்படுகிறது என்று திமுக சொல்லி வந்தது. ஆனால், இன்றைக்கு அதிமுக இன்றைக்கு பாஜகவை எதிர்க்கிறது என்று சட்டசபையிலேயே முதல்வர் ஸ்டாலினே சொல்லி விட்டார்.
அதைப்போல் 'அதிமுக யாருக்கும் பயப்படும் கட்சி இல்லை. பயந்து இருந்தால் கூட்டணியிலிருந்து வெளியே வந்திருக்க மாட்டோம். நாங்கள் சிங்கம் போல் வெளியே வந்துள்ளோம். பயந்தால் வெளியே வந்திருப்போமா?' என்று ஏறி அடிக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்.
இப்படி அரசியல் களம் இருக்கும் போது பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் எப்படி அதிமுகவை பாஜக பக்கம் இழுக்க முடியும் என்று நம்புகிறார்கள்?
இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. கூட்டணி என்பது அந்தக் கட்சிக்கு என்று இல்லை. ஆனால், தனிப் பெரும்பான்மையோடு ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் வெல்வது நடக்காத காரியம். கூட்டணி அமைத்தே பலருக்கு நாக்குத் தள்ளுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பலமான கூட்டணியாக திமுக கூட்டணி இருந்தது. அந்தக் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதியையும் வென்றது. ஆனால், காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து ஒரு தொகுதியில் தோல்வியைத் தழுவியது.
அப்படி அரசியல் களம் உள்ள போது, நாம் தமிழர் கட்சி எப்படி வெல்ல முடியும்? கடைசி வரை வங்குகளைப் பிரிக்கும் கட்சியாகவே நாதக இருந்துவிட வேண்டும் என்பது சீமானின் திட்டமா?
இப்போது அவரது விவசாயி சின்னத்திற்கும் வேட்டு வைக்க இருக்கிறார்கள். சின்னம் கிடைக்குமா? கிடைக்காத எனப் போராட்டம் வேறு நாதகவை ஒரு பக்கம் அழுத்தி வருகிறது.
'ஏர் உழவன் கேட்டேன். மாநிலக் கட்சிக்கு ஏற்கெனவே கொடுத்துள்ளோம் என்றார்கள். வண்டிச்சக்கரம் கேட்டேன். அது முன்பே ஒரு மாநிலக் கட்சிக்குக் கொடுத்துள்ளோம் என்றார்கள். அரிக்கேன் விளக்கு கேட்டேன். அதுவும் ஒரு மாநிலக் கட்சிக்குக் கொடுத்துள்ளோம் என்றார்கள்.
அப்படி என்றால் எனக்கு முன்பே கொடுத்துள்ள சின்னத்தை வேறு ஒரு கட்சிக்குக் கொடுக்கலாமா?' என்று வடிவேல் பாணியில் மீண்டும் முதலிலிருந்து சின்னம் கேட்டுப் போராடும் கட்சியாக நாதகவை மாற்றி இருக்கிறார்கள்.
இது எல்லாம் எங்கே போய் முடியுமோ?
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications