கூட்டணி வரும் போகும்.. அதிமுக கொள்கை என்றைக்கும் நிலையானது! பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
சென்னை: "கூட்டணி தேர்தலுக்கு தேர்தல் மாறும், அதிமுகவின் கொள்கை நிலையானது. தமிழ்நாட்டில் தனித்து நின்று ஆட்சியை பிடித்த ஒரே கட்சி அதிமுக" என்ன அதிமுக பொதுக்குழு & செயற்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் முன்னணி நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தப் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தப் பொதுக்குழுவில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "கூட்டணி என்பது, தேர்தலுக்கு தேர்தல் மாறும், அதிமுகவின் கொள்கை நிலையானது. இந்தியாவிலேயே உண்மையான உறுப்பினர்கள் கொண்ட ஒரே கட்சி அதிமுகதான். உறுப்பினர்கள் அட்டைகளை வீடு வீடாக சென்று அளித்த ஒரே கட்சி அதிமுக மட்டும் தான்.
தமிழ்நாட்டில் தனித்து நின்று ஆட்சியை பிடித்த ஒரே கட்சி அதிமுக. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கட்சி அதிமுக.
2021 தேர்தலில் வெறும் 1.98 லட்சம் வாக்குகளில் தான் ஆட்சி பறிபோனது.இன்னும் 50 ஆயிரம் வாக்குகள் மட்டும் வாங்கியிருந்தால் நமக்கு இன்னும் 23 எம்.எல்.ஏக்கள் கூடுதலாக கிடைத்திருப்பார்கள். நம்மை விட திமுக மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒன்றும் ஆட்சிக்கு வந்துவிடவில்லை.
மக்களவை தேர்தலில் பெரிய கூட்டணி இல்லாமல் 20.50% வாக்குகள் பெற்றோம். பெரிய கூட்டணி அமைத்த திமுக 26.5%வாக்குகளையே பெற்றது. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து பச்சைப் பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி திமுக தான்.
2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜக-வின் வாக்கு சதவீதம் உண்மையில் சரிந்துள்ளது. 2014 தேர்தலை ஒப்பிடும்போது பாஜக 1 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை இழந்துள்ளது. அதிமுகவிற்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி நடக்கிறது.
ஒற்றுமை என்பது மிகப்பெரிய பலம். யானைக்கு பலம் தும்பிக்கை; நமக்கு பலம் நம்பிக்கை. நம்பிக்கை என்பது மிகப்பெரிய ஆயுதம். அந்த நம்பிக்கை இருந்தால், நிச்சயம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்." எனப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
-
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications