அதிமுகவுடன் கூட்டணி- திட்டவட்டமாக அமித்ஷா பதில்..அண்ணாமலை ராஜினாமா செய்வாரா? காயத்ரி ரகுராம் கேள்வி
சென்னை: அதிமுகவுடன்தான் பாஜக கூட்டணி என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அறிவித்தபடி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதவி விலகுவாரா? என நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவுடனான கூட்டணி தயவில்தான் பாஜக தமிழ்நாட்டில் உயிர்ப்போடு இருக்கிறது. ஆனால் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை பயன்படுத்தி அக்கட்சியை பாஜக தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது அதிருப்தி அடைந்த அக்கட்சியின் பல்வேறு பிரிவு தலைவர்கள் அடுத்தடுத்து அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடர்ந்தால் ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை கூறினார்?
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) March 30, 2023
அண்ணாமலையின் முகத்தில் அறைந்தது போன்ற அமித் ஷா ஜியின் பதில் கொடுத்தார். இப்பொ என்ன? வார்ரூம் முட்டாள்கள் அமித் ஷா ஜியையே இப்போ தாக்குகிறது. ரோஷம் எங்கே? அண்ணாமலை ராஜினாமா pic.twitter.com/sncd56UbSh…
இதனால் தமிழ்நாடு பாஜக- அதிமுக தலைவர்களிடையே மிக மோசமான கருத்து மோதல்கள் வெடித்தன. இருதரப்பு தலைவர்களும் மிக கடுமையாக விமர்சித்துக் கொண்டனர். மேலும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாகவே இருப்பேன் என அண்ணாமலை பேசியதாகவும் தகவல்கள் பரவின. அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு சீனியர் பாஜக தலைவர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இப்பின்னணியில் அதிமுகவின் பொதுச்செயலாளராக அதாவது ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமி கரம் அதிமுகவில் வலிமையாகி உள்ளது. தற்போது, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் அதிமுகவுடன்தான் கூடணி; அதில் எந்த மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக கூறியிருந்தார். இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உறுதி செய்தார்.

இந்நிலையில் பாஜகவில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம், பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடர்ந்தால் ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை கூறினார்? அண்ணாமலையின் முகத்தில் அறைந்தது போன்ற அமித் ஷா ஜியின் பதில் கொடுத்தார். இப்போ என்ன? வார்ரூம் முட்டாள்கள் அமித் ஷா ஜியையே இப்போ தாக்குகிறது. ரோஷம் எங்கே? அண்ணாமலை ராஜினாமா செய்ய ரோஷம் இருக்கிறதா என்று முதலில் கேளுங்கள், வார்ரூம்? என ஆக்ரோஷமாக பதிவிட்டுள்ளார். அப்புறம் என்ன வழக்கம் போல அண்ணாமலை ஆதரவாளர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் கொந்தளித்து வருகின்றனர்.
-
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
தவெக பக்கம் ஓடும் அதிமுக நிர்வாகிகள்.. 6 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு? -
அதிமுகவின் 4ஆம் தலைமுறையாகும் மிதுன்? ஓபிஎஸ் மேல தண்ணி பாட்டிலை வீசி.. அப்பவே ப்ளான் போட்ட எடப்பாடி? -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
நயினார் தலைக்கு மேல் தொங்குது கத்தி.. ’கணக்கு’ கேட்கும் டெல்லி! கோபத்தில் கண்சிவந்த அமித் ஷா! பரபர -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன?












Click it and Unblock the Notifications