"தம்பி விஜய்யிடம் கேட்டேன்.. காங்கிரஸை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு என்ன அரசியல் பேசுவீங்க?"- சீமான்
சென்னை: "முதலில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாமா என தம்பி என்னிடம் கேட்டபோது காங்கிரஸை சேர்த்துக்கொண்டால் எந்த அரசியல் பேசுவீர்கள் எனக் கேட்டேன். அவர்களை கூட்டணியில் வைத்துக்கொண்டு என்ன பேசுவது?" எனக் கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
வரும் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், நாம் தமிழர் கட்சி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல் வியூகங்கள் மற்றும் களப்பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக, நிர்வாகிகள் தங்களுக்குள் எவ்வித முரண்பாடுகளும் இன்றி, வேட்பாளர்களுடன் இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக, வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி திருச்சியில் 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' என்ற பெயரில் மாநாடு நடத்த நாதக ஆயத்தமாகி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, 234 தொகுதிகளுக்கும் இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களுடனான முக்கிய ஆலோசனைக் கூட்டம், சீமான் தலைமையில் போரூரில் இன்று நடைபெற்றுள்ளது. இதில், தொகுதி வாரியாக மேற்கொள்ள வேண்டிய பிரச்சார முறைகள், வாக்கு சேகரித்தல், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் உள்ளூர் பிரச்சனைகளுக்கு அளிக்க வேண்டிய முன்னுரிமை, ஆளும் கட்சி நிறைவேற்றாத வாக்குறுதிகளை எடுத்து வைத்தல் உள்ளிட்டவை குறித்து வேட்பாளர்களுக்கு சீமான் அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், "தவெகவில் இருப்பவர்கள் எல்லாம் சின்ன பசங்க. நாட்டை யார் நாசப்படுத்துவது என்பதில் வேண்டுமானால் திமுக - தவெகவுக்கு இடையே போட்டி இருக்கலாம். போட்டி என்பது கொள்கை அடிப்படையிலானது. நாங்கள் உலகப் பொதுமைக்கான அரசியலை எடுத்து வைக்கிறோம்.
வாக்குக்கு பணம் கொடுப்பது, கூட்டணிக்கு பேரம் பேசுவது, நாங்கள் வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு 2000, பேருந்துகளில் ஆண்களுக்கு இலவசம் என்பதெல்லாம் எங்கள் அரசியல் அல்ல, அதற்குள் நாங்கள் வரவில்லை." எனக் கூறியுள்ளார் சீமான்.
காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்க தவெக முயற்சித்து வருவதாக கூறப்படுவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், "காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என தம்பியிடம் கூறினேன். முதலில் காங்கிரஸ் கட்சியை சேர்த்துக் கொள்ளலாமா என தம்பி என்னிடம் கேட்டபோது காங்கிரஸை சேர்த்துக்கொண்டால் எந்த அரசியல் பேசுவீர்கள் எனக் கேட்டேன்.
கச்சத்தீவு பற்றி பேசுவீர்களா? காவிரி உரிமை பற்றி பேசுவீர்களா? மீத்தேன், ஈத்தேன் பற்றி பேசுவீர்களா? ஜிஎஸ்டி கொண்டு வந்தது யார்? நீட்டை திணித்தது யார்? மாநில உரிமைகளை பறித்தது யார்? இந்தி திணிப்பு யார் செய்தது? பாபர் மசூதியை இடிக்க அனுமதித்தது யார்? அவர்களை கூட்டணியில் வைத்துக்கொண்டு என்ன பேசுவது?" எனக் கேள்வி எழுப்பினார்.
-
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு











Click it and Unblock the Notifications