சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூட்டணிக்கு மறுப்பு தெரிவித்த கமலுக்கு ஏன் அழைப்பு... முத்தரசன் குழப்பம்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இதுவரை அதிகாரப்பூர்வமாக நடக்கவில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டணி வைக்க விருப்பம் இல்லை என்று சொன்ன நடிகர் கமல் ஹாசனை காங்கிரஸ் கட்சி அழைத்தது குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

Alliance With DMK have not been officially Start yet Says Mutharasan, CPI State secretary

நடிகர் கமல்ஹாசன், திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருந்தார். இதனால், திமுக கூட்டணியில் கமல் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியானது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரான கே.எஸ்.அழகிரி, கமல் ஹாசன் திமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என அழைப்பு விடுத்தார். இது திமுக கூட்டணியில் குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், "திமுக, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என கமல்ஹாசன் கூறியுள்ளார்; கமல் கூறிய பிறகு கூட்டணியில் சேர வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறியது ஏன் என்று தெரியவில்லை?" என்றார்.

மேலும், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இதுவரை அதிகாரப்பூர்வமாக நடக்கவில்லை என்றும்
தெரிவித்தார்.

English summary
Mutharasan Said That KS Azhagiri has called Kamal Haasan to come to the DMK coalition. It has created confusion in the DMK coalition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X