விஜய் சாதி அரசியல் செய்றார்.. இந்தாங்க தேவர் புத்தகத்தையும் பிடிங்க.. நூலகத்திற்கே போன சௌத்ரி தேவர்!
சென்னை: நடிகர் விஜய் உத்தரவின்படி, அண்மையில் விஜய் நூலகங்கள் தொடங்கப்பட்ட நிலையில், அரசியலுக்காக நூலகத்தை பயன்படுத்த வேண்டாம் என விஜய்க்கு அறிவுறுத்தியுள்ளார் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எம்.சௌத்ரி தேவர்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடங்கப்பட்ட விஜய் பயிலகம் திட்டத்தை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் 'தளபதி விஜய் நூலகம்' திறக்குமாறு விஜய் கேட்டுக் கொண்டார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர், நூலகங்களை தொடங்கி வருகின்றனர். நடிகர் விஜய் தனது அரசியல் வருகையை உறுதி செய்யும் விதமாக தான் இது போன்ற புதிய முன்னெடுப்புகளை செயல்படுத்தி வருகிறார்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை குரோம்பேட்டையிலும் நூலகம் தொடங்கப்பட்டது. காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள், பொது அறிவு, போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி கையேடு என நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இந்த நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், சினிமா தயாரிப்பாளர் ஏ.எம்.சௌத்ரி தேவர், விஜய் நூலகத்திற்குச் சென்று, முத்துராமலிங்க தேவர் தொடர்புடைய புத்தகங்களை வழங்கியுள்ளார்.
நடிகர் விஜய் உத்தரவின்படி, அவரது ரசிகர்கள் அமைத்துள்ள நூலகத்தில் கட்டமைக்கப்பட்ட தலைவர்களின் புத்தகங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும், சாதி அரசியல் செய்வதாகவும் குற்றம்சாட்டி ஏ.எம்.சௌத்ரி, தேவர் புத்தகங்களை வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பதிவை பலரும் பகிர்ந்து, விஜய் மக்கள் இயக்கத்தின் நடவடிக்கையை விமர்சித்து வருகின்றனர்.

இதுதொடர்பாகப் பேசியுள்ள ஏ.எம்.சௌத்ரி தேவர், "விஜய் மக்கள் இயக்க நூலகங்களுக்கு தேவர் புத்தகங்களை வழங்கும் பணியை தொடங்கினேன். இன்று முதல் முறையாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள நூலகத்திற்கு தேவர் புத்தகங்களை வழங்கினேன். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விஜய் மக்கள் இயக்க நூலகங்களுக்கு தேவர் புத்தகங்களை வழங்க உள்ளேன். இனி வரும் காலங்களில் தேவரின் சக்தியையும் அரசியலையும் விஜய் மற்றும் விஜய் மன்றத்தினர் தெரிந்துகொள்ள வேண்டும்.
விஜய் நூலகத்தில், பெரியார், அம்பேத்கர், காமராஜர் போன்ற கட்டமைக்கப்பட்ட தலைவர்களின் புத்தகங்களை வைத்துள்ளனர். நூலகங்கள் அனைவருக்கும் பொதுவானவை. நூலகங்களின் சிறப்பே, மாணவர்கள் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். அங்கும் போய், கட்டமைக்கப்பட்ட தலைவர்கள் புத்தகங்களை மட்டும் வைத்துள்ளனர்.

உலகைத் தாண்டி படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டிய பொக்கிஷம் நூலகம். அந்த நூலகத்திலும் விஜய் அரசியல் செய்கிறார். நூலகத்திலும் அரசியல் செய்கிறார். திருமாவளவன் போன்ற தலைவர்கள் அம்பேத்கர் படத்தை காட்டி அரசியல் செய்வார்கள். விஜய்யின் அரசியல் என்ன? அம்பேத்கரையும், காமராஜரையும் காட்டி அரசியல் செய்தால் அது சாதி அரசியலாகத்தான் பார்க்கப்படும்.
விஜய் நூலகத்தில் முத்துராமலிங்கத் தேவர், வ.உ.சி புத்தகங்கள் எல்லாம் இல்லை. இன்று குரோம்பேட்டையில் உள்ள நூலகத்திற்குச் சென்றேன். அங்கு அறிவை வளர்ப்பதற்கான புத்தகங்கள் இருப்பது போலத் தெரியவில்லை. மாணவர்கள் அறிவை வளர்த்துக்கொள்ள, மாணவர்களுக்கு கிடைக்காத புத்தகங்கள், அவர்களால் அதிக விலை கொடுத்து வாங்க முடியாத புத்தகங்களை நூலகங்களில் வைக்க வேண்டும். ஆனால், அங்கு அரசியல் செய்வதற்காக சில தலைவர்களின் புத்தகங்களை வைத்துள்ளனர். அதனால் அங்கு தேவர் புத்தகங்களை வழங்கினேன்.

நூலகத்தை வீம்புக்கு தொடங்கி, குறிப்பிட்ட தலைவர்களை மட்டும் முன்னிலைப்படுத்தினால், நான் தேவர் படத்தோடு வருவேன். தேவர் படத்தை மாட்டி, புத்தகங்களை வைப்பேன். நாடகத்திற்கு நூலகம் நடத்தாதீர்கள். ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து, அறிவு சார்ந்த புத்தகங்களை வையுங்கள். கட்டமைக்கப்பட்ட தலைவர்களின் புத்தகங்களை வைப்பதால் மாணவர்களுக்கு என்ன பயன்? நூலகத்தின் நோக்கம் என்ன என்பதை தெரிந்துகொண்டு அதைச் செய்யுங்கள் விஜய் அவர்களே.
உங்களால் தேவர் புத்தகங்களை வைக்க முடியவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் நானே தேவர் புத்தகங்களை வழங்குகிறேன். மாணவர்களின் கல்வி அறிவை வளர்ப்பதற்கான புத்தகங்களை வையுங்கள். நூலகங்களை வைத்து கீழ்த்தரமாக அரசியல் செய்ய நினைக்காதீர்கள். வரும் காலத்தில் திருத்திக் கொள்ளுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
-
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம்












Click it and Unblock the Notifications