எல்லாமே டிராமா.. சீட்டுக்கான பேரம்.. முதலில் இதை செய்யுங்க – திருமாவளவனுக்கு அமர் பிரசாத் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விசிக நடத்தவுள்ள மது ஒழிப்பு மாநாடு, தமிழ்நாடு அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. இது அரசியல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதேநேரத்தில் பாஜகவினர் இந்த மாநாட்டை விமர்சித்து வருகின்றனர். அந்தக் கட்சியின் நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, விசிக முதலில் தன் கட்சிக்காரர்களை குடிக்க கூடாது என்று சொல்லட்டும் என்று விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமர் பிரசாத் ரெட்டி, "ஒரு நாளுக்கு சாராயம் குடித்து எத்தனை பேர் செத்துப் போறாங்க. இதற்கு யார் மீது வழக்குப் போடவேண்டும். அமைச்சர் மீது தானே வழக்கு போட வேண்டும். மதுவை எதிர்த்து திருமாவளவன் போராட்டம் நடத்துகிறார். முதலில் அவர் தனது கட்சியில் இருப்பவர்களை குடிக்கக் கூடாது என்று சொல்ல வேண்டும். நமது கட்சியில் சீர்திருத்தம் கொண்டு வந்துவிட்டு, மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும்.

amar prasad reddy vck

பொதுவாக அரசியல் கட்சிகள் மக்களுக்கு அட்வைஸ் செய்கிறார்கள். உண்மையில் உங்கள் கட்சியினருக்கு அறிவுரை கொடுத்து, விசிகவில் யாரும் குடிக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பாஜகவிலும் அப்படித்தான். இங்கு யாரும் எந்தத் தவறும் செய்வதில்லை. நமது கட்சியில் உறுப்பினராக இருப்பவர்கள், எந்தத் தவறும் செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

பாமகவில் மதுஒழிப்பு என்பது கட்சி தொடங்கப்பட்டபோதே உருவாக்கப்பட்ட கொள்கை. திருமாவளவனுக்கு திடீரென்று ஞானோதயம் வருகிறது. இது ஒரு டிராமா. அதில் யாரும் பங்கேற்க மாட்டார்கள். திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் இருக்கிறார். அவருக்கும், முதலமைச்சருக்கும் எவ்வளவு கி.மீ தொலைவு. அவர் நேரடியாக முதலமைச்சர் வீட்டுக்கு சென்றே வலியுறுத்தலாம். அதனால்தான் இந்த மாநாட்டை டிராமா என்கிறோம்.

முதலில் உங்கள் கட்சியில் யாரையும் குடிக்க கூடாது என்று விசிக தலைமை சொல்லுமா என்பது கேள்விக்குறி. அவர் யார் அதிகம் சீட் கொடுப்பார்களோ, அங்கு போவோம் என்ற பேரத்துக்காக தான் இதை செய்கிறார். மற்றபடி அவருக்கு முன்பிருந்தே திமுகவில் பெரியளவுக்கு மரியாதை இருப்பதாக தெரியவில்லை. சும்மா ஒட்டிக் கொண்டிருக்கிறார். அவ்வளவுதான்.

மகாவிஷ்ணு பெரிய தீவிரவாதியா. 100 பேரை கொன்றுவிட்டாரா. கோவையில் அவ்வளவு பெரிய வெடிகுண்டு போட்டபோது, அதை சிலிண்டர் விபத்து என்று தானே திமுக கூறியது. மகாவிஷ்ணு அப்படி என்ன செய்துவிட்டார். ஏதோ கல்வி நிறுவனத்துக்கு சென்று பேசியுள்ளார். எச்சரிக்கை செய்து விடுங்கள். அமைச்சர் பொன்முடி ஓசி சோறு, ஓசி பஸ் என்று கல்லூரி நிகழ்ச்சியில் தானே கூறினார். அவர் மீது வழக்கு போட்டீர்களா. இந்து கடவுள் இல்லை என்று திகவினர் எத்தனை பள்ளி, கல்லூரிகளில் பேசுகிறார்கள்.

கானத்தூரில் கொடி கம்பம் வழக்கில் போலி வழக்கு பதிவு செய்தனர். அந்த குற்ற பத்திரிகையில் அத்தனை தவறுகள் உள்ளன. அந்த குற்ற பத்திரிகையை படிக்கும்போதே, அதில் இவர்கள் எந்தளவுக்கு வடை சுட்டுள்ளனர் என்று தெரிகிறது. தமிழக காவல்துறை மிகவும் கண்ணியமானது. அவர்கள் இப்போது திமுகவுக்காக வேலை செய்கிறார்கள் என்பது வேதனையாக உள்ளது.

பொய் சொல்பவர்களை, தவறு செய்பவர்களை கைது செய்து தண்டனை கொடுப்பதுதான் காவல்துறை. காவல்துறையே தவறான அறிக்கை செய்கிறார்கள் என்பது வேதனையாக உள்ளது. இதை சட்டரீதியாக சந்திப்போம்.” என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+