சிறையில் இருந்து வந்த அமர் பிரசாத் ரெட்டி.. மறக்க முடியாத அளவிற்கு அமர்க்களம் செய்த பாஜக தொண்டர்கள்
சென்னை: பாஜக கொடிக்கம்பம் அமைக்கும் வழக்கில் கைதாகி சிறை சென்ற அக்கட்சியின் மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி இன்று ஜாமினில் வெளியே வந்தார்..அவரை பாஜக தொண்டர்கள் பொன்னாடை அணிவித்து, பட்டாசு வெடித்து, ஆராத்தி எடுத்து, உற்சாகமாக வரவேற்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு 50 அடி உயரத்தில் பாஜக கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கடந்த அக்டோபர் 20ம் தேதி முற்றுகையிட்டனர். அன்று நள்ளிரவு பாஜகவினருக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து விசாரித்த போலீசார் அங்கு கொடிக்கம்பம் இருக்கக்கூடாது என்று அகற்ற முயன்றனர்.

இதையடுத்து, பாஜகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பொக்லைன் வாகன கண்ணாடி உள்ளிட்டவற்றை பாஜகவினர் அடித்து உடைத்தார்கள். இது தொடர்பான புகாரின் பேரில், பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பாஜகவினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 6 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள்
இவர்களின் ஜாமீன் மனு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்ப ராஜ் வாதிடுகையில் "இந்த விவாகரத்தில் அமர் பிரசாத் ரெட்டி மட்டுமல்ல நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்டுள்ளனர். எனவே, அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அமர்பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினார். கொடிக்கம்பம் வைக்க ஏற்கெனவே அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதனை மீறி கொடிக்கம்பம் வைத்ததாகவும் வாதிட்டார். மேலும் உடைக்கப்பட்ட ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியின் மதிப்பு ஐம்பதாயிரம் ரூபாய் என்றும் வழக்கறிஞர் முனியப்ப ராஜ் வாதிட்டார்.
திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வழக்குப் புனையப்பட்டு கைது செய்யப்பட்ட சகோதரர் அமர் பிரசாத் ரெட்டி உட்பட பாஜக நிர்வாகிகள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்
— பாரத தேசம் கோபி (@Gopalak12365012) November 11, 2023
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மீண்டும் தர்மமே வெல்லும்@amarprasadreddy pic.twitter.com/VZWTpGG33Q
'
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சி.வி.கார்த்திகேயன், இந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன? என்று கேள்வி எழுப்பியதுடன், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் இன்னும் எத்தனை நாட்கள் சிறையில் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
நிபந்தனைகள் என்ன? அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் சென்னையை அடுத்த கானாத்தூர் காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், ஜேசிபி இயந்திரம் சேதப்படுத்தப்பட்டதற்காக அதன் உரிமையாளருக்கு 6 பேரும் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 12 ஆயிரம் ரூபாயை இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டார். மேலும், அரசிடம் அனுமதி பெறாமல் சம்பந்தப்பட்ட இடத்தில் கொடிக்கம்பம் வைக்க கூடாது எனவும் உத்தரவிட்டார்.
ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நீதிமன்ற நடைமுறைகளுக்கு பின்னர் இன்று காலை அமர்பிரசாத் ரெட்டி புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். புழல் சிறையில் இருந்து வந்த அமர்பிரசாத் ரெட்டியை, உற்சாகமாக வரவேற்று காரில் அழைத்து வந்த பாஜக நிர்வாகிகள், பட்டாசு வெடித்து அமர்களம் செய்தனர். மிகப்பெரிய மாலை அணிவித்து, போட்டி போட்டு கைகுழுக்கியதுடன், பொன்னாடை போர்த்தினார்கள். மேலும் பாரத் மாதாகி ஜே என்று தொண்டர்கள் குரல் எழுப்பினார்கள்.. அதன்பிறகு ஆராத்தி எழுத்து திலகமிட்டு வரவேற்றார்கள்.. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications