’அமரன்’ சிவகார்த்திகேயன் நடிக்கல..வாழ்ந்திருக்காரு! பள்ளிகளில் போட்டு காட்ட செல்வ பெருந்தகை கோரிக்கை
சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த படத்தை அனைத்து பள்ளிகளிலும் திரையிட வேண்டுமென கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை.
தமிழகத்தின் சென்னையில் பிறந்து ராணுவத்தில் பணியாற்றி தீவிரவாதிகளுக்கு இடையேயான போரில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை கதை அமரன் திரைப்படமாக வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை பல தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் தொடர்ந்து படத்தை பாராட்டி வருகின்றனர். திமுக பாஜக என வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் படத்தை வெகுவாக புகழ்ந்து வரும் நிலையில் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆன செல்வ பெருந்தகை.
இதுதொடர்பாக அவரது பதிவில்,”காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை வைத்து உலக நாயகன் திரு. கமல்ஹாசன் அவர்கள் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களை மிகச் சிறப்பாக நடிக்க வைத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தை பார்க்கிற அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. படத்தை பார்த்து மட்டற்ற மகிழச்சியும், மன நிறைவும் அடைந்தேன்.
காஷ்மீர் எல்லையில் ராணுவம் எப்படி இயங்குகிறது, அங்கிருக்கும் சவால்கள், தீவிரவாதத்தால் காஷ்மீர் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நேரில் பார்த்து தெரிந்து கொள்வதைப் போல தத்ரூபமாக அமரன் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய திரைப்படங்களை எடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. துணிந்து இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நடிகர் திரு. சிவகார்த்திகேயனுக்கு இது வாழ்நாள் கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. மிடுக்கான தோற்றப் பொலிவு, கச்சிதமான நடிப்பு, சண்டைக் காட்சிகளில் கடுமையான உழைப்பு, வீரத்தையும், தியாகத்தையும் ஒருசேர உணர்த்துவதில் அபார சாதனை படைத்து வெற்றி பெற்றிருக்கிறார். காலத்தால் அழியாத கருவூலமாக இத்திரைப்படம் அமைந்திருக்கிறது. அவரது நடிப்பு என்றும் பேசப்படும், போற்றப்படும்.
அமரன் திரைப்படம் பயங்கரவாதத்தை முறியடிக்க, நமது ராணுவ வீரர்கள் தங்களது உயிரை துச்சமென நினைத்து நாட்டுப் பற்றோடு எத்தகைய தியாகத்தை செய்ய முனைகிறார்கள் என்பதை இத்திரைப்படம் மிக நேர்த்தியாக உணர்த்துகிறது. இப்படத்தில் திரு. கமல்ஹாசன் அவர்கள் நடிக்காமல் திரு. சிவகார்த்திகேயனுக்கு அந்த அரிய வாய்ப்பை வழங்கி நடிக்க வைத்து, தயாரித்ததன் மூலம் அவரது நம்பிக்கை அபார வெற்றி பெற்றிருக்கிறது. இப்படத்திற்கு ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கம்பீரமான ராணுவ வீரரின் தோற்றத்தில் தன் உடல் மொழியால் தான் ஏற்றிருக்கும் கதா பாத்திரத்தை சுமந்து பயணித்ததை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இத்திரைப்படத்தில் எல்லோரையும் நடிக்க வைத்து சாதனை படைத்திருக்கிறார் இயக்குநர் திரு. ராஜ்குமார் பெரியசாமி. ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் மனைவியாக நடித்த சாய்பல்லவி, படத்தை பார்க்கிறவர் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறார். அவர் நடிக்கவில்லை. கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அனைவரது பாராட்டையும் வெற்றிருக்கிறார்.
நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் துறந்த ராணுவ வீரரின் தியாகத்தை கதையாக மட்டுமல்லாமல், எல்லையோரத்தில் பயங்கரவாதத்தோடு போராடுகிற முகுந்த் வரதராஜன், காதல் மனைவியின் மீதும், தன் குடும்பத்தின் மீதும் வைத்திருந்த பாசப் பிணைப்பை இணைத்து இத்திரைக்கதை எழுதி வடிவமைக்கப்பட்டு, இயக்கப்பட்டுள்ளது. இதில் நடித்த அனைவருமே மிகச் சிறப்பாக தங்களது பணியை செய்திருக்கிறார்கள். இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு எதிராக பலரை இழந்திருக்கிறோம். பல ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
நமது மண்ணையும், நாட்டையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பதை இத்திரைப்படம் தெளிவாக உணர்த்துகிறது. முகுந்த் வரதராஜனாக நடித்த திரு. சிவகார்த்திகேயன் சொந்தமாக ஒரு வீடு வாங்குவதற்கு கடனை வாங்கி, அந்த மாத தவணையை செலுத்துவதற்கு தனது வருமானத்தில் ஒரு பங்கையும், தனது மனைவியின் வருமானத்தில் ஒரு பங்கையும் செலுத்துவதற்கு திட்டமிடுவதன் மூலம் அவர்களது வாழ்க்கையின் உண்மை நிலை அனைவருக்கும் உணர்த்தப்பட்டிருக்கிறது.
பயங்கரவாதத்தை முறியடிப்பதில் ராணுவ வீரர்கள் எப்படி தங்களை அர்ப்பணித்துக் கொண்டு அதை எதிர்த்து போராடுகிறார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது. அமரன் திரைப்படம் மிகச் சிறப்பாக தயாரிக்கப்பட்டு, வெளிவந்திருக்கிறது. இதற்காக திரு. கமல்ஹாசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இத்திரைப்படத்தை இன்றைய இளைய சமுதாயத்தினர் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும். இத்திரைப்படத்தை பார்ப்பதன் மூலமாக அவர்களிடையே நாட்டுப் பற்று நிச்சயம் வளரக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இது இன்றைய காலத்தில் மிகமிக அவசியமாகும்.
அமரன் திரைப்படத்திற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து, தமிழக மக்கள் அனைவரும் பார்க்கக் கூடிய வாய்ப்பை வழங்குகிற வகையில், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அதேநேரத்தில், அனைத்து பள்ளி மாணவர்களும் பார்க்கிற வகையில் கல்வித்துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பி அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமேயானால், மாணவர்களிடையே தேசபக்தி உணர்வை மேலோங்க செய்வதற்கு இதைவிட ஒரு அரிய வாய்ப்பு நமக்கு கிடைக்காது. எனவே, தமிழக முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications