தமிழ்நாட்டுக்கே மகிழ்ச்சி.. அரசு பஸ்ஸில் "500" மாற்றம் வருது.. போக்குவரத்து துறை மாஸ்.. சென்னை குஷி
சென்னை: சென்னைக்கு மட்டுமல்லாமல், தமிழக மக்களுக்கே குட்நியூஸ் ஒன்று, போக்குவரத்து துறை சார்பில் வெளியாகி உள்ளது. என்ன அது?
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை, 659 வழித்தடங்களில், 3,436 பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.. 32 டிப்போக்கள் மூலம் கையாளப்படும் இந்த பஸ்களில், தினமும் கிட்டத்தட்ட 33.60 லட்சம் பேர் பயணம் செய்தும் வருகிறார்கள்.

எனினும், சென்னை போன்ற பெருநகரங்களில் நாளுக்கு நாள், போக்குவரத்து தேவைகள் அதிகரித்தபடியே உள்ளன.. மெட்ரோ ரயில்களின் வருகை பெருத்த பலனை தந்தாலும், சாலை போக்குவரத்தையும் மேம்படுத்த வேண்டியுள்ளது.
ரயில்கள்: அதுமட்டுமில்லாமல் கிளாம்பாக்கத்தில் பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டுள்ளதால், சென்னை உட்பட புறநகர் பகுதிகளில் இருந்து தினசரி கூடுதல் பஸ்களை இயக்கவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, சென்னை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், ஐடி கம்பெனிகள், தனியார் நிறுவனங்கள் போன்றவை அதிகரித்து வருவதால், பஸ்களின் தேவையும் அதிகமாகி கொண்டிருக்கிறது.. அதனால்தான், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, கூடுதல் பஸ்களை வாங்க கடந்த வருடம் முதலே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெண்டர்கள்: குறிப்பாக, புதிதாக பேட்டரி பஸ்கள் வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக, 100 பேட்டரி பேருந்துகளுக்கு ஏற்கனவே டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான நிதியை KfW (ஜெர்மன் டெவலப்மென்ட் பேங்க்) மூலம் ஒவ்வொரு பஸ்களும் சுமார் 2 கோடி ரூபாய் வழங்கும் என்றும், டெண்டரை வழங்க நிதி நிறுவனத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழுக்காக மாநில அரசு காத்திருப்பதாகவும், 4 மாதங்களுக்கு முன்பு, போக்குவரத்து வட்டாரங்கள் தரப்பில் கூறப்பட்டிருந்தன.
எனவே, இதற்கு இணையாகவும், முதல்கட்டமாகவும், உலக வங்கியின் நிதியுதவியின் மூலம் 500 மின்சார பஸ்களை வாங்குவதற்கு, ஒரு மாதத்தில் டெண்டர் விடவும் மாநில அரசால் திட்டமிடப்பட்டு, பிறகு 2ம் கட்டமாக மேலும் 500 மின்சார பஸ்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் தகவல்கள் அப்போது வெளியாகியிருந்தன. இந்நிலையில், இதுகுறித்த அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது..
100 பஸ்கள்: அதாவது, முதல்கட்டமாக 100 மின்சார பேருந்துகளுக்கு ஏற்கெனவே டெண்டர் கோரப்பட்டிருந்த நிலையில், மேலும் 500 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் டெண்டர் கோரியுள்ளதாம்.. அந்த வகையில், மின்சார பேருந்துகள் இயக்கம், பராமரிப்பு பணி மேற்கொள்ள தகுதியான நிறுவனங்கள் டெண்டர் கோர அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் சொல்லும்போது, மேலும் 500 பேட்டரி பேருந்துகளை இயக்குவதற்கான டெண்டர் வெளியிட்டுள்ளோம். இதற்கான, முழு விவரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும்.
மகிழ்ச்சி தகவல்: பேட்டரி சார்ஜிங் மையங்களை முக்கிய பணிமனைகள் மற்றும் பஸ் நிலையங்களில் அமைக்க உள்ளோம். பேட்டரி பஸ்களை தனியார் பங்களிப்போடு இயக்க உள்ளோம். பேருந்து இயக்கம், பராமரிப்பு பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொள்ளும். அடுத்த சில மாதங்களில் புதிய பஸ்கள் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications