தமிழக ரேஷன் கடைகளில் மான்ய "ரசீது" வாங்கிட்டீங்களா? தமிழக அரசின் அடுத்த அதிரடி.. செம
சென்னை: ரேஷன் கடைகளில் பொருட்கள் விற்பனையில் புதிய மாறுதல் கொண்டுவரப்பட்டுள்ளது.. இது ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 210 ரேஷன் கடைகளுக்கான கண்கருவிழி பதிவு கருவி மூலம் ரேகை பதிவு செய்து பொருட்கள் விநியோகம் செய்யும் பணியை அமைச்சர் பெரியசாமி துவக்கி வைத்தார். இதற்கான விழா, தாடிக்கொம்பு ரேஷன் கடையில் நடைபெற்றது.

அமைச்சர்: அப்போது அமைச்சர் பேசும்போது, "இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கூட்டுறவுத்துறை மூலம் ரேஷன் கடைகள் சிறப்பாக செயல்படுகிறது.. பொதுவிநியோகத் திட்டத்திற்கென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் என்ற தனித்துறை தி.மு.க., ஆட்சிக்காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.
ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் வழங்கப்பட்டு வருகிறது. கைரேகை பதிவு மூலம் பொருட்கள் வாங்கும்போது சிரமங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் கண் கருவிழி மூலம் பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் கைரேகை பதிவினால் ஏற்படும் சிரமங்கள் தவிர்க்கப்படுகிறது" என்றார் அமைச்சர்.
மானியம்: இதனிடையே,7 தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரசீதில், ஒவ்வொரு பொருளுக்கும் தமிழக அரசு மானியமாக எவ்வளவு தொகையை செலவிடுகிறது என்ற விபரத்தை உணவு துறை வெளியிடுகிறது.
தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன..
முறைகேடுகள்: எனவே, உணவு மானியத்திற்காக மட்டும், தமிழக அரசு ஆண்டுக்கு, 10,500 கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது.. எனினும், அரிசி கார்டு வைத்திருக்கும் நிறையபேர், இலவச அரிசியை தவிர்த்துவிட்டு, ரேஷனில் உள்ள மற்ற பொருட்களை பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அந்த அரிசியை விற்றது போல் பதிவு செய்து, ரேஷன் ஊழியர்கள் முறைகேடாக கள்ளச் சந்தையில் விற்றுவிடுகிறார்கள்.
அதனால்தான், கார்டுதாரர்களின் மொபைல் போன் எண்ணுக்கு SMS அனுப்பும் முறை கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த மெசேஜ்களை அனுப்பினாலும், பலரும் கண்டுகொள்வதில்லை. அதனால் அடுத்த அதிரடியாக, ரேஷன் கடைகளுக்கு விரல் ரேகை பதிவு, பிரின்டர் ரசீதுடன் கூடிய புதிய விற்பனை கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.. அத்துடன் விழிரேகை சரிபார்ப்பு கருவியும் வழங்கப்படுகிறது...
மானிய தொகை: அதாவது, பொருட்களை விற்கும்போது வழங்கப்படும் ரசீதில், ரேஷன் கார்டு எண், நுகர்வோர் பெயர், பொருட்கள் விற்பனை அளவு, அதற்கான தொகை உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படுகின்றன. மொத்த தொகையில் கார்டுதாரர் வழங்க வேண்டியது, தமிழக அரசின் மானியம் எவ்வளவு என்ற விபரங்கள் அந்த ரசீதில் இடம் பெற்றிருக்கின்றன.
சில ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்த நிலையில், இப்படியொரு முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.. இந்த ரசீதில், ஒவ்வொரு பொருளுக்கும் அரசு எவ்வளவு செலவழிக்கிறது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது... இதனை பார்த்து, அரசுக்கு ஏற்படும் செலவை கார்டுதாரர்கள் அறிந்து கொள்ள முடியும்... அதேசமயம், ரேஷன் கடைகளில் தவறு நடந்தால், ரசீதில் உள்ள தொலைபேசி எண்களிலும் புகார் தரவும் முடியும்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications