பட்டா மாறுதல்.. சொத்தை பத்திரப்பதிவு பண்ணும்போது இது அவசியம்.. ஆவணங்கள் என்னென்ன?அரசின் சூப்பர் வசதி
சென்னை: பட்டா மாறுதல் செய்வதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்னெனன? பட்டா மாறுதலில் விண்ணப்பங்களில் கட்டாயம் குறிப்பிட வேண்டிய அம்சங்கள் என்னென்ன? கூட்டுப்பட்டா தேவைப்படும் எனில், அதனை எப்போது மாற்றிலாம்?
எப்போதுமே சொத்து வாங்குபவர்கள் அந்த சொத்தை தன்னுடைய பெயருக்கு பத்திரப்பதிவு செய்துவிடுவதுடன் பட்டா மாற்றத்தையும் செய்து கொள்ள வேண்டும். முதலில், நீங்கள் வாங்கும் சொத்து, எந்த தாலுகா எல்லைக்கு உட்பட்டது என்பதை அறிந்து, அந்த பகுதியிலுள்ள தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பொது சேவை மையம்: நிலத்தை வைத்திருப்பவர்கள், பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்..
விண்ணப்பதாரர் பெயர், தகப்பனார் அல்லது கணவர் பெயர், இருப்பிட முகவரி போன்ற விவரங்களை தெளிவாக எழுத வேண்டும்... அதேபோல பட்டா மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரங்களையும் கவனமாக குறிப்பிட வேண்டும். இதில், பிழை எதுவும் வந்துவிடக்கூடாது என்பதால், சர்வே எண் உள்ளிட்ட எண்களை அடித்தல் திருத்தலின்றி எழுத வேண்டும்.
சர்வே எண்: அதேபோல, சொத்துக்குரிய சர்வே எண் உள்ளடக்கிய இடம் முழுமையாக வாங்கப்பட்டுள்ளதா? அல்லது சொத்தின் ஒரு பகுதி மட்டும் வாங்கப்பட்டுள்ளதா? என்பதையும் அறிந்து, அதுதொடர்பான சர்வே நம்பரையும் பதிவிட வேண்டும்... ஒருவேளை, ஒரு பகுதியை மட்டும் வாங்குவதாக இருந்தால் உட்பிரிவு சர்வே எண்ணை சரியாக நிரப்ப வேண்டும். அத்துடன் பட்டா மாறுதலுக்கு கட்டணம் செலுத்திய விவரங்களையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
சொத்து உரிமையாளருடையதுதான் என்பதை உறுதி செய்யும் வகையில், சொத்துவரி செலுத்திய ரசீது, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைக்க வேண்டும்.. சொத்தானது பாகப்பிரிவினை, செட்டில்மெண்ட், உயில் என ஏதாவது ஒரு ஆவணம் மூலம் கிடைத்திருக்கலாம். அது பற்றிய விவரத்தையும் விண்ணப்பத்துடன் இணைப்பது கட்டாயமாகும்.
வெப்சைட்: ஆன்லைனிலும் இந்த பட்டா மாறுதலை செய்து கொள்ளலாம். "எங்கிருந்தும் எந்நேரத்திலும்" என்ற வெப்சைட் மூலம், எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை நம்மால் பெற முடியும். இதற்கு https://tamilnilam.tn.gov.in/citizen/என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
கிரையப் பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், தானப்பத்திரம், பரிவர்த்தணை பத்திரம், விடுதலை பத்திரம், போன்ற பத்திரங்களில் ஏதாவது ஒன்று இதற்கு தேவைப்படும்.. அதேபோல, நீங்கள் எந்த சொத்தை பட்டா மாற்ற வேண்டுமோ அந்த சொத்தினுடைய ஆவணம், அதாவது சொத்து பத்திரமும் (Registration Document) அவசியம் தேவை.. பட்டா மாற்றம் செய்ய இருக்கும் சொத்தினுடைய தாய் பத்திரமும் வேண்டும். இந்த சொத்தினுடைய கணினி சிட்டா மற்றும் வில்லங்க சான்றிதழும் தேவைப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications