Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி.. மழைக்காலம் வேற.. ரேசன் கடைகளுக்கு போன உத்தரவு.. தமிழக அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் அட்டைதாரர்கள் கேஒய்சி அப்டேட் செய்யுமாறு கொடுத்த காலவகாசம் முடிந்த நிலையில், வரும் டிசம்பர் 1ம் தேதி வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு.. இந்நிலையில், தமிழக அரசு ஒரு நம்பிக்கையான தகவலை வெளியிட்டிருக்கிறது. இது ரேஷன்தாரர்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.

பொதுமக்களுக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் அட்டையே, ரேஷன் கார்டுகள் ஆகும். இந்த ரேஷன் அட்டையை வைத்து ரேஷன் கடைகளில், இலவசமாகவும் மலிவு விலையிலும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

ration card holders ration shop

மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை போன்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே, தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள சுமார் 7 கோடியே 2 லட்சம் பயனாளிகள் ரேஷன் வாங்கி வருகிறார்கள்.

அரசு உதவிகள்: இந்த ரேஷன் கார்டுகள் இருந்தால்தான், அரசின் உதவிகளை எளிதாக பெற முடியும். எனவே, இந்த சலுகைகளை பெறுவதற்காக போலி ரேஷன் கடைகளின் எண்ணிக்கை பெருகி கொண்டிருக்கிறது.. இதனால், மோசடிகளும் பெரிய அளவில் நடப்பதாக தெரிகிறது.

அதனால்தான், இந்த மோசடிகளை தடுத்து, அரசின் திட்டங்களும், உதவிகளும், மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டும் என்பதற்காகவே ரேஷன் கார்டில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்த கேஒய்சி செய்ய உத்தரவு பிறப்பிக்கக்கப்பட்டுள்ளது. 2 ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை கண்டறியும் விதமாகவும் இப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு: அரசு அறிவுறுத்தலின்படி ஆதார் கார்டு உள்ளிட்ட தகவல்களை கொடுத்து ரேஷன் கார்டு கேஒய்சி அப்டேட் செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்படுவது உறுதி என்றும், உடனடியாக இதுகுறித்து அருகில் இருக்கும் நியாய விலைக் கடைகளில் விவரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கார்டு அப்டேட் செய்வதற்கு, https://tnpds.gov.in/ என்ற வெப்சைட்டிற்குள் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம். இல்லாவிட்டால் அருகில் இருக்கும் அரசு இசேவை மையங்களுக்கு சென்றும் ரேஷன் கார்டில் கேஓய்சி அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

அதிகாரிகள்: இந்நிலையில், தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.. தமிழகத்தில் ரேஷன் தட்டுப்பாடின்றி வினியோகம் செய்ய, ரேஷன் கடைகளில் உணவு தானியங்களை அதிகம் இருப்பு வைக்கும்படி, அதிகாரிகளை உணவு துறை அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார்.. உணவு துறை செயல்பாடு தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில், அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், செயலர் ராதாகிருஷ்ணன், நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அமைச்சர் சக்கரபாணி சொல்லும்போது, "விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை, விரைவாக அரிசியாக மாற்ற, அரவை ஆலைகளுக்கு உடனுக்குடன் அனுப்ப வேண்டும். மழைக்காலம் துவங்கியுள்ளதால், தாழ்வான இடங்களில் உள்ள ரேஷன் கடைகளை, மாற்று இடங்களுக்கு விரைவாக மாற்ற வேண்டும்.

அதிக இருப்பு: ரேஷன் கடை, கிடங்குகளில் உள்ள தானியங்கள் மழையில் நனையாதபடி பாதுகாக்க வேண்டும். கார்டுதாரர்களுக்கு தட்டுப்பாடின்றி வினியோகம் செய்ய, ரேஷன் கடைகளில் உணவு தானியங்களை அதிகளவில் இருப்பு வைக்க வேண்டும்" என்று அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதுமட்டுமல்ல, மழை காலம் தொடங்கிவிட்டதால் தாழ்வான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உள்ள பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வெள்ளம், கனமழை பெய்துள்ள இடங்களில் பொதுமக்களுக்கு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவுத்துறை ராதாகிருஷ்ணன் ஏற்கனவே நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், அமைச்சரின் இந்த உறுதிப்பேச்சும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+